அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய கைதி.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

By Ramya sFirst Published May 2, 2024, 10:26 AM IST
Highlights

கர்நாடகாவில் சிறையில் இருந்த கைதி ஒருவர் அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் ஷிவமொகா மத்திய சிறையில் உள்ள கைதிக்கு கடுமையான வயிற்று வலி காரணமாக பெங்களூருவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் பேட்டரி மற்றும் சிம் கார்டுடன் இருந்த பைலை அகற்றினர். தற்போது, கர்நாடக சிறைச்சாலைகள் (திருத்தம்) சட்டம் 2022ன் கீழ், தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருந்ததாக, ஷிவமொகா மத்திய சிறைக் கண்காணிப்பாளர், கைதி மீது புகார் அளித்துள்ளார்.

ஷிவமொகாவை சேர்ந்த பரசுராம் என்பவர் மார்ச் 28-ஆம் தேதி கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறி உள்ளார். அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டதால், அதிகாரிகள் அவரை ஷிவமொகாவில் உள்ள மெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆபாச வீடியோ சர்ச்சை: முதல் முறையாக மவுனம் கலைத்த பிரஜ்வல் ரேவண்ணா!

பின்னர், மருத்துவரின் ஆலோசனையின்படி, பெங்களூருவில் உள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஏப்ரல் 25ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அவரது வயிற்றில் இருந்து மொபைல் போன் எடுக்கப்பட்டதாக அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர் டாக்டர் நியாஸ் அகமது அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பெங்களூரு மத்திய சிறை அதிகாரிகள் கைதியின் வயிற்றில் இருந்த பேட்டரி மற்றும் சிம்முடன் செல்போனை ஷிவமொகா சிறைக்கு அனுப்பி வைத்தனர். சிறை கைதிகள் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறையில் சோதனை நடந்த போது அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க பரசுராம் போனை விழுங்கியதாக கூறப்படுகிறது. கைதிகளிடம் மொபைல் போன்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பிற பொருட்கள் உள்ளனவா என்பதை சரிபார்க்க போலீசார் அடிக்கடி சிறை வளாகத்தில் சோதனை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சிறை கண்காணிப்பாளர் அனிதா இதுகுறித்து பேசிய போது " கைதி விதிமுறைகளை மீறியதால் துங்கா காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Crime: தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்தும், கம்பியால் அடித்தும் கொடூர கொலை; சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்

click me!