பாம்பு கடித்தது குணமடைய கங்கை நீரில் இளைஞரை மிதக்க விட்ட குடும்பத்தினர்.. மூட நம்பிக்கையால் உயிரிழந்த பரிதாபம்

By Ajmal KhanFirst Published May 2, 2024, 2:01 PM IST
Highlights

பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடலில் ஏறிய விஷத்தை இறக்க கங்கை நதியில் இளைஞரை கயிறால் கட்டி மிதக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூட நம்பிக்கை இளைஞரின் உயிரை பறித்துள்ளது.  
 

மூட நம்பிக்கையால் விபரீதம்

நிர்வாண பூஜை செய்தால் செல்வம் கிடைக்கும், நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும், தலைப்பிள்ளையை பலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்ற மூட நம்பிக்கையை நிஜம் என நம்பி உயிர் பலி கொடுத்திருப்பவர்கள் தொடர்பாi கதையை கேட்டிருப்போம். இதே போல புற்றுநோய் குணமடைய கங்கை நீரில் 5 வயது குழந்தையை மூழ்கி சாவடித்த சம்பவம் இன்னமும் நம்மை விட்டு மறைவதற்கு முன்பு பாம்பு கடித்த விஷத்தில் இருந்து குணமடைய இளைஞர் ஒருவரை இரண்டு நாட்களாக கங்கை நதியில் கட்டி வைத்து மிதக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய கைதி.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

இளைஞரை கடித்த பாம்பு

உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர்  கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.  இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி தனது சொந்த கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். தேர்தல் தினத்தில் வாக்களித்ததற்கு பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களோடு வயல்வெளிக்கு சென்றபோது பாம்பு கடித்துள்ளது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டவரை அருகில் இருந்த மருத்துவரிடம் குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

கங்கை நதியில் இளைஞரை கட்டி வைத்த குடும்பத்தினர்

இளைஞர் மோகித் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவத்தால் சரி ஆகாது என கை விரித்துள்ளனர். இதனையடுத்து கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய மோகித் குடும்பத்தினர், மூடநம்பிக்கையால் கயிறு கட்டி கடந்த இரண்டு தினங்களாக மோகித்தின் உடலை கங்கை நதியின் போட்டு வைத்துள்ளனர். சுயநினைவின்றி கிடக்கும் மோகித் உடலில் விஷம் இறங்கி விடும் உடல் நிலை தேறிவிடும் என அவரது குடும்பத்தினர் காத்துள்ளனர்.

ஆனால்  மூடநம்பிக்கை எதுவும் அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இருந்த போதும் இளைஞர் மோகித்தின் உடல் தொடர்ந்து கங்கை நதியில் மிதக்கவிட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது  சுமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sengottaiyan : அதிமுகவில் உட்கட்சி மோதலால் பாஜகவில் இணைகிறேனா.?? செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்

click me!