பெங்களூருவில் 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வெப்பம்.. வானிலை மையம் ஷாக் தகவல்..

By Ramya sFirst Published May 2, 2024, 2:47 PM IST
Highlights

பெங்களூருவில் நேற்று 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 40 ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது தான்.

மார்ச் மாதம் தொடங்கியது முதலே நாட்டின் பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல இடங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 40 ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது தான். மேலும் கெம்பே கௌடா சர்வதேச விமான நிலையத்திலும் வரலாறு காணாத வகையில் 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

பெங்களூரு வானிலை மைய விஞ்ஞானி சன்னபசனகௌடா இதுகுறித்து பேசிய போது “ பொதுவாக பெங்களூருவில் மே மாதத்தில் வெப்பம் குறைய தொடங்கும். ஆனால் தற்போது நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்” என்று தெரிவித்தார்.

பெங்களூருவை பொறுத்த வரை இந்த மே மாதத்தில் 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூருவில் 11 நாட்கள் கடும் வெப்பம் பதிவானது. ஆனால் 2024-ம் ஆண்டி நிலைமை மேலும் மோசமாகும் என்றும் இந்த ஆண்டு 20 நாட்கள் 38 டிகிரி வரை கடும் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்று கணித்திருந்தாலும், இதுவரை பெங்களூருவில் மழை பதிவாகவில்லை. எனினும் கடும் வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலைக்கு பிறகு உள் கர்நாடக மாவட்டங்கள், பெங்களூருவில் அடுத்த வாரத்தில் மழை பெய்ய. வாய்ப்புள்ளதாகவும், அதன்பின்னர் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!