சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெஹர் பதவியேற்பு

First Published Jan 4, 2017, 10:41 AM IST
Highlights


சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்., தாக்கூர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து 44 ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெஹர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஜெகதீஸ் சிங் கெஹர் பிறந்தார். பின்னர் அங்குள்ள  கல்லுரியில் பட்டப்படிப்பு பயின்ற அவர் எல் எல் பி மற்றும் எல் எல் எம் போன்ற சட்டப் படிப்புகளை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

இதனையடுத்து பஞ்சாப்,ஹரியானா மாநில உயர்நிதிமன்றங்களில் பிராக்டிஸ் செய்தார். தொடர்ந்து  கர்நாடகா,உத்ரகாண்ட்,பஞ்சாப் போன்ற மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் பனியாற்றியுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் பனியாற்றியபோது 2ஜி ஸ்பெக்ட்ரம், சகாரா உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின 44 ஆவது தலைமை நீதிபதியாக இன்று பொறுபேற்றுக் கொண்டார். டெல்லி ரைசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும்  செய்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த முதல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற பெருமையை  ஜெ.எஸ்.கெஹர் பெற்றுள்ளார்.

click me!