"இலங்கை அதிபர் 2017, ஜனவரி 26-ல் கொல்லப்படுவாராம்": ராஜீவ் காந்தியை கொல்ல முயன்ற முன்னாள் வீரர் ஆருடம்

First Published Dec 23, 2016, 3:48 PM IST
Highlights


இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா 2017ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி கொல்லப்படுவார் என ராஜீவ்காந்தியை கொலை செய்ய முயன்ற முன்னாள் கப்பல்படைவீரர் விஜிமுனி விஜிதா ரோகனா டி சில்வா ஆருடன் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜிதா ரோகனா, ஜோசியாராக பணி செய்து வரும் நிலையில், திடீரென இந்த கணிப்பை தெரிவித்தள்ளதால், அந்நாட்டு அரசு இவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தியா-இலங்கை இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, 1987-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி கொழும்பு சென்றார். அப்போது கப்பல்படை அணிவகுப்பை பார்வையிட்டு வரும்போது, பின்னால் அணிவகுப்பில் இருந்த வீரர் ஒருவர், துப்பாக்கியின் பின்புறக்கட்டையால் ராஜீவ்காந்தியை தாக்கி கொலை செய்ய முயந்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக ராஜீவ்காந்தி விலகியதால், லேசான அடியுடன் அவர் உயிர்பிழைத்தார்.

அப்போது ராஜீவ்காந்தியை கொலை செய்ய முயன்றவர்தான் விஜிமுனி விஜிதா ரோகனா டி சில்வா, அதன்பின் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின், வெளியே வந்தார். அதன்பின், ஜோதிடம் படித்து, ஜோதிடராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் விஜிமுனி விஜிதா ரோகனா டி சில்வா தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், “ 2017ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கொல்லப்படுவார்'' எனத் தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இலங்கை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நிமல் போஜே, இது குறித்து கூறுகையில், “ விஜிமுனி விஜிதா ரோகனா டி சில்வா பேஸ்புக்கல் எழுதியதை போலீசாரும், புலனாய்வு அதிகாரிகளும் மேம்போக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது.  கடந்த 5 மாதங்களாக சிறிசேனாவுக்கு எதிராக, விஜிமுனி விஜிதா ரோகனா டி சில்வா தீவிர பிரசாரம் செய்து வந்துள்ளார்.  இவர் தன்னை ஜோதிடர் என்று கூறிக்கொண்டு அதிபர் கொல்லப்படும் தேதியை கூறுயுள்ளார். இது குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்படும்'' என்று தெரிவி்ததார்.

இதற்கிடையே இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலனவர்கள் ஜோதிடத்தை தீவிரமாக நம்புகிறவர்கள். எந்த ஒரு முக்கியமான செயல், முடிவு எடுக்க முற்பட்டாலும், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்ட பின் எடுப்பார்கள்.

முன்னாள் அதிபர் ராஜபக்சே கூட தனது அதிபர் பதவி 2 ஆண்டுகள் இருக்கும் முன் தேர்தல் நடத்துவது குறித்து, தனது ஜோதிடரிடம் கேட்டபின்பே தேர்தலை  சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!