இப்படி எல்லாமா செல்ஃபி எடுப்பாங்க ? இப்ப பாருங்க ஒரு உயிர் போச்சே !!

First Published Jul 6, 2018, 8:40 AM IST
Highlights
selfi with snake by village people and snake dead


மேற்கு வங்க மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள் இதனுடன் டிசைன், டிசைனா செல்ஃபி எடுத்துக் கொண்டதில் அந்த பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தியா மட்டுமல்ல உலகமே செல்ஃபி மோகத்தில் வீழ்ந்து கிடக்கிறது.  இதில் எத்தனையோ ஆபத்துகள் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது இன்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வது நாளுக்கு நான்அதிகரித்து வருகிறது. பாறை இடுக்கு, உயர்ந்த மலை, நடுக்கடல், ஓடும் டிரெயின் என எதையும் விட்டு வைக்காமல்  இளைஞர்கள் செல்ஃபி எடுத்து தள்ளி வருகின்றனர். ஆனால் இது மிகப்பெரும் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது.

ஆனால் செல்ஃபி மோகத்தால் தங்களது உயிரையே விடும் நிலையில் தற்போது ஒரு கிராம மக்களின் செல்ஃபி மோகத்தால் பாம்பு ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாபுஜியோர் கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் செல்லும் ஆற்றில் 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். பின்னர் அதனுடன் பல்வேறு விதமாக செல்பியை எடுத்துள்ளனர்.



செல்பி எடுப்பதற்காக பாம்பினை மிக மோசமாக கையாண்டதால் மலைப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிலர் பாம்பின் கழுத்துப்பகுதியை பிடித்த வண்ணமும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

click me!