அடேங்கப்பா..!! ரூ.8.45 லட்சம் கோடி வரவு....! 60% டெபாசிட் ஆயிடுச்சாம்...!! - 50 நாளில் 100% சாத்தியமா?

First Published Nov 29, 2016, 9:56 AM IST
Highlights


ரூபாய் நோட்டு செல்லாது என  மத்திய அரசு அறிவித்ததில் இருந்து,  ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றியது, செலுத்திய வகையில், கடந்த 27-ந்தேதிவரை, ரூ.8.45 லட்சம் கோடியை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர். 60% வரவு வந்துள்ளதாம். மீதமுள்ள நாட்களில் 40% வந்துவிடுமா?

ஒட்டுமொத்தமாக ரூ.500, ரூ1000 நோட்டுகள் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கி தொடக்கத்தில் கூறியிருந்தது. இந்நிலையில்,  அதில் ஏறக்குறைய 60 சதவீதம் கரன்சியை இப்போது திரும்பப் பெற்றுவிட்டது. இன்னும் மீதமுள்ள 40 சதவீதம் மட்டுமே மக்களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டியிருக்கிறது. 

ஆக பிரதமர் மோடியின் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.  

 ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பில் பழைய ரூபாய்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியில் கொடுக்கும் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை இருக்கிறது. 

இந்த காலம் முடிவதற்குள் ஏறக்குறைய  கருப்பு பணம் வடிகட்டப்பட்டு, பொருளாதார ஓட்டத்துக்கு தேவையான பணம் மட்டும் அரசை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். 

அதைத்தொடர்ந்து மக்களிடம் இருக்கும் பழைய ரூபாய்களை வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் கொடுத்து மக்கள் மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து 27-வரை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த பணம் குறித்த விவரத்தை ரிசர்வ் வங்கி நேற்று இரவு வெளியிட்டது. அதன் விவரம் -

கடந்த 10-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை, பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றியது, டெபாசிட் செய்தவகையில், ரூ 8 லட்சத்து 44 ஆயிரத்து 982  கோடி டெபாசிட்டாக வந்துள்ளது. 

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி  புதிய நோட்டுகளாக ரூ. 33 ஆயிரத்து 948 கோடியை மக்கள் பெற்றுச் சென்றுள்ளனர். 

பழைய ரூபாய் நோட்டுகளாக மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்து 33 கோடி டெபாசிட் செய்துள்ளனர். 

ஏ.டி.எம். கள் மற்றும் வங்கிக் கவுன்ட்டர்களில் சென்று ரூ. 2 லட்சத்து 16ஆயிரத்து 617 கோடி பெற்றுள்ளனர். 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

click me!