மார்ச் ஒன்று முதல் ரேஷன் கடைகளில் மின்னனு பரிவர்த்தனை…மத்திய அரசு அதிரடி….

First Published Dec 23, 2016, 1:45 PM IST
Highlights


மார்ச் ஒன்று முதல் ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை…மத்திய அரசு அதிரடி….

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியான பொது மக்கள் அனைவரும் ரொக்கத்திற்கு பதிலாக டெபிட் கார்டு, கிரடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என  மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது. மேலும்  மின்னணு பரிவர்த்தனை மூலமாகவே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பொது மக்களுக்கு பல்வேறு பரிசுகளையும்  மத்தியஅரசு அறிவித்தது.அதுமட்டுமல்லாமல் அரசு நடவடிக்கைகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக வரும் மார்ச் ஒன்றாம் தேதி  முதல் ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்படும்  என்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆய்வு சென்னையில் நடைபெற்றது.

தமிழக உணவுத் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திதல் உள்ள அனைத்து ரே ஷன் கடைகளிலுல், மின்னனு பரிவர்த்தனை தொடங்கப்படும் என தெரிவித்தார்

click me!