காலியாக உள்ள ரிசர்வேசன் டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி..ரயில்வே துறை அதிரடி

First Published Dec 30, 2016, 8:34 AM IST
Highlights


காலியாக உள்ள ரிசர்வேசன் டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி..ரயில்வே துறை அதிரடி

குறைந்த கட்டணம்  பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக பொதுமக்கள் அதிக அளவில் ரெயில் பணத்தை விரும்புகின்றனர். கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுமார் 3 மாதங்களுக்கு  முன்பே அனைத்து படுக்கை வசதி மற்றும் ஏ.சி. வசதி கொண்ட சீட்டுகள் முன்பதிவு ஆகிவிடும்.

சீசன் அல்லாத நேரங்களில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் படுக்கை வசதி மற்றும் ஏ.சி. சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே செல்லும். இதனால் ரெயில்வே துறைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் காலியாக உள்ள சீட்டுகள் ரிசர்வேசன் சார்ட் இறுதி செய்தபின் 10 சதவீத கட்டணம் தள்ளுபடியுடன் அளிக்கப்படும் என்று ரெயில்வேத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும்  1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆனாலும்  ரிசர்வேசன் மற்றும் சூப்பர் பாஸ்ட் போன்றவைக்கான அனைத்து கட்டணங்களும் டிக்கெட்டுடன் வசூலிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

click me!