ஹேக் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் ட்விட்டர்...!!! அருவறுப்பான வார்த்தைகளால் அர்ச்சனை

First Published Dec 1, 2016, 9:36 AM IST
Highlights


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு சில மர்மநபர்களால் நேற்று இரவு திடீெரன ஹேக் செய்யப்பட்டது. 

அந்த கணக்கில் ராகுல்காந்தியையும், அவரின் குடும்பத்தினரையும் குறிவைத்து மிகவும் அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் மர்மநபர்கள் கருத்துக்களை பதிவு செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல்காந்தியை டுவிட்டர் தளத்தில், ஏறக்குறைய 12 லட்சம் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த டுவிட்டர் தளத்தில் ராகுல்காந்தி சுயமாக கருத்துக்களை பதிவு செய்வதில்லை, ஆனால், அவரின் அலுவலகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிஅளவில், திடீரென ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு திடீரென மர்மநபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. இந்த மர்மநபர்கள் தங்களை “லீஜியன்கள்” என்ற பெயரில் வந்து ராகுல்காந்தியையும், அவரின் குடும்பத்தினர் குறித்தும் மிகவும் மோசமான வார்த்தைகளால் கடுமையான கருத்துக்களை பதிவு செய்தனர். 

இந்த மர்மநபர்களுக்கும், ராகுல்காந்தியின் அலுவலக பணியாளர்களுக்கும் டுவிட்டரில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஆனால், மர்மநபர்கள் தொடர்ந்து ராகுல்காந்தி குடும்பத்தினர் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவு செய்தததால், அதை அழிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

ஆனால், இந்த ஹேக்கர்கள், தற்போது நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

“நான் கூறும் கருத்தால் உன்னால் என்னை என்ன செய்யமுடியும்”, “60 ஆண்டுகளாக உங்கள் குடும்பம் நாட்டை அழித்துவிட்டது”, “ஊழலில் ஊறிய குடும்பம்” என தனிப்பட்ட முறையில் ராகுல்காந்தியை வறுத்து எடுத்தனர். 

ஆனால், ராகுல்காந்தியின் அலுவலக அதிகாரிகள், டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட பெரும்பாலான கருத்துக்களை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். 

இது குறித்து ராகுல்காந்தியின் அலுவலக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், ராகுல்காந்தியின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்படும். சைபர் போலீசார் மூலம் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர். 

click me!