பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா? - முழு விவரம்..!!!

First Published Jan 3, 2017, 5:38 PM IST
Highlights


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே ஜனவரி 31-ந் தேதியே கூட்டுவது என்றும், பொது பட்ஜெட்டுடன், ரெயில்வேபட்ஜெட்டை இணைத்து, பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்வது என்றும் நேற்று நடந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 92 ஆண்டுகளாக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த தனி ரெயில்வே பட்ஜெட் என்ற முறையும் நீக்கப்படுகிறது. மானியங்களை நீக்கவும், சீர்திருத்தங்களை கொண்டு வரவும் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் நடுப் பகுதி வரை நடக்கும். அடுத்து ஜூன்  மாதத்தில் பருவமழை தொடங்கிவிடும். மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பணம் கிடைக்காமல் அக்டோபர் மாதத்துக்கு மேல்தான் திட்டள்கள் அனைத்தையும் செயல்படுத்த முடியும். இதனால், நிதி அளிப்பதில் கடும் தாமதம் இருந்தது.

இதை சரிசெய்ய, அடுத்த நிதியாண்டின் செலவுகளை இந்த நிதியாண்டின் இறுதிக்குள், அதாவது, மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து செலவுகளுக்கான மானியக்கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிட்டால், நிதியாண்டு தொடக்கத்தில் அதாவது, ஏப்ரல் முதல்தேதி முதல் திட்டங்களுக்கான செலவு எளிதாக மாநிலங்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், திட்டமிட்ட மற்றும் திட்டமிடா செலவுகளையும் நீக்கவும் பட்ஜெட்டை முன்கூட்டியை கூட்டுவதன் மூலம் குறைக்க முடியும் என அரசு கருதிதியது.

மாநிலங்களை திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த முடியும். இதன் காரணமாகவே பட்ஜெட் கூட்டம் முன்கூட்டியே கூட்டப்படுகிறது. இதன் மூலம் திட்டங்களுக்கு எளிதாக செலவு செய்து, நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று அரசு நம்புகிறது.

click me!