புதுச்சேரியில் மார்ச் முதல் மதுபானக்‍ கடைகள் குறையும் : கிரண்பேடி கருத்து

First Published Dec 23, 2016, 3:53 PM IST
Highlights


மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டால் குற்றச்செயல்கள் பெருமளவில் குறையும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், பல்வேறு குற்றச்செயல்கள் குறித்து பேட்ஜ் வெளியிடுதல், அம்பேத்கர் சட்டக்‍ கல்லூரி மாணவர்களுக்‍கு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற கருத்தரங்குக்‍ கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. கிரண்பேடி, உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, வரும் மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் உள்ள மதுகடைகளின் எண்ணிக்‍கை குறையும் என்று குறிப்பிட்டார். மது அருந்துவோர் எண்ணிக்‍கை குறையும் போது, குற்றச்செயல்களின் எண்ணிக்‍கை குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான திரு. என். ஜெயச்சந்திரன், கல்வித்துறை செயலாளர் திரு. அருண் எல். தேசாய், தலைமை நீதிபதி S. ராமதிலகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

click me!