அடுத்த ரெண்டு நாளைக்கு பாலியல் தொழிலுக்கு விடுப்பு...!! மும்பையில் 300 அழகிகள் அதிரடி முடிவு...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 21, 2020, 6:22 PM IST
Highlights

இந்நிலையில்  மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் , கொரோனாவை எதிர்க்கும் நோக்கிலும்  பாலியல் தொழிலுக்கு விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளனர் .

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நிலையை மக்கள்  தாங்களாகவே முன்வந்து கடைபிடிக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் ,  மும்பை பாலியல் தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளனர் . அதே நேரத்தில் மகாராஷ்ட்ரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில்  பாலியல் தொழிலாளர்கள் அதற்கு  தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளனர்.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை காட்ட தொடங்கியுள்ளது . 

இதுவரை  இந்தியா முழுவதும் 271 பேர் அந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால்  இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் நாளை 22ம் தேதி ஒரு நாள் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் அடங்கி  ஊரடங்கு நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது . அதேநேரத்தில் மகாராஷ்டிரா அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்நிலையில் அம்மாநிலத்தில் தானே மாவட்டத்தில் பிவான்டி என்ற பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில்  மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் , கொரோனாவை எதிர்க்கும் நோக்கிலும்  பாலியல் தொழிலுக்கு விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளனர் .  அதாவது நாளை நாளைய மறுதினம் ஆகிய இரண்டு தினங்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது இல்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். 

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அவர்களின் இரண்டு நாள் விடுப்பை ஈடுகட்ட பல தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன அவர்களின் பிள்ளைகளை பராமரிக்கவும் அவர்களின்  குடும்ப செலவுக்கு உதவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .  ஷர்மஜீவி சங்கத்னா என்ற அமைப்பு அவர்களின்  குழந்தைகளை பராமரிக்க முடிவு செய்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் கான் ,  அவர்கள்  வசிக்கும் பகுதியில் வெளி ஆட்களுக்கு அடுத்த இரண்டு தினங்களுக்கு அனுமதி இல்லை .   அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது . 

 

click me!