மனைவியின் உடை சர்ச்சை... ட்விட்டரில் பொங்கிய கிரிக்கெட் வீரர் ஷமி

First Published Dec 26, 2016, 5:01 PM IST
Highlights


கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில்  தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு  `அழகான நேரங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். ஷமியும் அவரது மனைவியும்  இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிய மனைவியை அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெட்கக் கேடானது. ஒரு முஸ்லிமாக, உங்கள் மனையியை பர்தா அணியச் சொல்லுங்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், என்று ஒருவர் விமர்சித்துள்ளார்

இந்த விமர்சனங்கள் குறித்து கருத்து  வெளியிட்டுள்ள முகமது ஷமி, எனது குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும் என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எனது குழந்தையும், மனைவியும் என் வாழ்க்கைப் பங்காளர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும். நாம் எவ்வளவு நல்லவர்கள் என்பதை, நாம் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் ஷமி தெரிவித்துள்ளார்.

முகமது ஷமியின் கருத்துக்கு, கிரிகெட் வீரர் முகமது ஃகைப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

click me!