44 கோடி ஏழைகளுக்கு வீடு, மின்வசதி, குடிநீர், சமையல் கியாஸ்....அடுத்த பட்ஜெட்டில் பிரதமர் மோடியின் அதிரடி

First Published Jan 2, 2017, 9:06 PM IST
Highlights


வரும் 2017-18ம் ஆண்டு பொது பட்ெஜட்டில், நாட்டில் உள்ள 44 கோடி மக்களுக்கு குடியிருக்க வீடு மட்டும் அரசு அளிக்கப் போவதில்லை, அவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், சமையல் கியாஸ் ஆகியவை வழங்குவதுதான் பிரதமர் மோடியின் திட்டமாகும்.

மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் அமரஜீத் சின்ஹா புதுடெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-

வீடு கட்டும் திட்டம்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ. 9 லட்சம் கடன் பெறுபவருக்கு 4 சதவீதமும், ரூ.12 லட்சம் வரை கடன் பெறும் மக்களுக்கு வட்டி யில்3 சதவீதம் தள்ளுபடிபடியும், ரூ. 2லட்சம் பெறுபவர்களுக்கு 3 சதவீதமும் வட்டியில் தள்ளுபடி தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

வங்கிக்கணக்கில்

இதில் சமதளமான பகுதிகளில் வீடுகட்டுவோருக்கு ரூ. 1.30 லட்சமும், மலைப் பகுதிகளில் வீடு கட்டும் பயணாளிகளுக்கு ரூ.1.50 லட்சமும் அவர்களின் வங்கிக் கணக்குக்கே பரிமாற்றம் செய்யப்படும்.

மேலும், அனைத்து பயணாளிகளுக்கும் வீடுகளில் கழிவறை கட்டுவதற்காக கூடுதலாக ரூ.12 ஆயிரமும், ஊரகவேலை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்காக 90 நாள் வேலையும் ரூ. 18 ஆயிரமும் அளிக்கப்படும்.

44 கோடி மக்கள்

அடுத்த ஆண்டு 33 கோடி மக்களுக்கு வீடு கட்டித்தர அரசு திட்டமிட்டு இருந்தது. அதை திருத்தி, 44 கோடி மக்களுக்கு வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயித்துள்ளது. மக்களுக்கு தரமான வீடுகளும், அந்த வீடுகளில் மின்சாரம், சுத்தமான குடிநீர், சமையல் கியாஸ் ஆகியவற்றை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நிலம் பதிவு

வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்து, குடிசை வீடுகள் இல்லாமல் செய்வது அரசின் நோக்கமாகும். ஆதலால், மாநில அரசுகள் தேர்வு செய்யப்பட்ட  பயணாளிகளுக்கு உரிய இடத்தை அவர்களின் பெயரில் மாற்றித்தர வேண்டும்.

60 சதவீதம்

பயணாளிகளில் 60 சதவீதம் பேர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்  இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பயணாளிகளைத் தேர்வு செய்யும் பணி முடிந்தவுடன், அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த பணம் தவறான வழியில் செலவழிக்கப்படுகிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணிக்கும்.

மேலும், வீடுகள் கட்டுவதற்காக 30 ஆயிரம் கொத்தனார்களுக்கு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!