ரேவண்ணா தன்னை காவலில் எடுக்கப்படுவதற்கு இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கர்நாடாக நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து, அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஆபாச வீடியோ வழக்கில் எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு சனிக்கிழமை கைது செய்துள்ளது. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களை ரேவண்ணாவும் அவரது ஆட்களும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில் எச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது உதவியாளர் சதீஷ் மீது கர்நாடகா காவல்துறையால் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரேவண்ணாவின் வீட்டில் ஐந்து வருடங்கள் பணிபுரிந்த அந்தப் பெண், மூன்று வருடங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார். எச்டி ரேவண்ணாவின் நெருங்கிய உதவியாளரான சதீஷ், ஏப்ரல் 26ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றார். அன்றே அவர் வீடு திரும்பினார். மீண்டும் எச்டி ரேவண்ணாவின் ஆள் ஏப்ரல் 29ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து அவரைக் காணவில்லை என அவரது மகன் கூறியுள்ளார்.
பூவால் பலியான கேரள இளம்பெண்! மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது நடந்த விபரீதம்!
ரேவண்ணா தன்னை காவலில் எடுக்கப்படுவதற்கு இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கர்நாடாக நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து, அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இன்று அவரது தந்தை எச்.டி.ரேவண்ணாவுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது
ஆன்லைன் மோசடியில் இதுதான் புது ட்ரெண்ட்! உஷாரா இல்லாட்டி பேங்க் அக்கவுண்ட் காலி!