ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு '1 கோடி ரூபாய் பரிசு ' - 'ஜெய் பீம்' App-யும் அறிமுகம் செய்தார் மோடி

First Published Dec 30, 2016, 4:55 PM IST
Highlights


கருப்பு பண ஒழிப்பின் நடவடிக்கையாக பழைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை

ஒழித்து கட்டியதால் நாடே பெரும் இன்னலுக்கு ஆளானது.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்து 50 நாட்கள் முடிவடைய போகும் இந்த நேரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து ஆங்காங்கே தனது பில்டப் பேச்சுக்களை பேசி வருகிறார் மோடி.

சில நாட்களுக்கு முன்பு பஞ்சாபில் பேசிய மோடி கபாலி ரஜினி ஸ்டைலில் 'நானொன்றும் ரிப்பன் கட் பண்ணுவதற்காக பிரதமர் பதவிக்கு வரவில்லை' என்றும் 'கருப்பு பணத்தை ஒலிக்கும் வரை விடமாட்டேன்' என்றும் ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மோடி கலந்து கொண்டார்.

அதில் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக புதிய சில நடைமுறைகள் கொண்டுவருவது பற்றி அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக மின்னணு முறையில் பண பரிவர்த்தனை செய்பவர்களை குழுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.

மேலும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பெருவிரல் ரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.

இம்முறையை செயல்படுத்த மொபைல் ஆப் ஒன்று அறிமுகப்படுதப்படும் என்றும் இந்த APP-க்கு ஜெய் பீம் ஆப் என பெயரிடப்படுள்ளதாகவும் மேலும் மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையிலும் இதற்கு ஜெய் பீம் ஆப் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று இந்த Appன் மூலமாக பண பரிவர்த்தனை செய்பவர்களில் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கபடுவர்களுக்கு ஒரு கோடி ருபாய் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

click me!