எதிரிகளின் தாக்குதலை விட உடல் நலக்குறைவால் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு எத்தனை தெரியுமா...??? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

First Published Nov 28, 2016, 11:01 AM IST
Highlights


கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 774 வீரர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக  பாதுகாப்பு படை இயக்குனர் டி.கே.பதக்  தெரிவித்துள்ளார். 

இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக் குறைவு காரணங்களால் அதிகம் உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் கூறியதாவது,

சுமார் 2.5-லட்சம் வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2016 க்குட்பட்ட காலத்தில் மொத்தம் இதுவரை 774வீரர்கள் உயிர் நீத்துள்ளதாகவும், அதில் 25 பேர் மட்டுமே பயங்கரவாத தாக்குதலினால் இறந்துள்ளனர் என்றும், 117 மாரடைப்பாலும், 316 பேர் பல்வேறு நோய் காரணமாக இறந்தாகவும், மற்ற சிலர் மலேரியா போன்ற நோய் தாக்குதலினாலும், சாலை விபத்துக்களிலும் உயிரிழந்தாதாக தெரிவித்துள்ளார். 

click me!