‘முச்சந்தியில் நிற்க’ தயாராகுங்கள் மோடி - லாலுபிரசாத் யாதவ் கடும் தாக்கு

First Published Dec 27, 2016, 5:38 PM IST
Highlights


ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாகி 50 நாட்கள் முடிந்தபின், மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க முந்சந்தியை(நான்குசாலைசந்திப்பு) தேர்வு செய்து தயாராக இருங்கள் பிரதமர் மோடி என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளது. இதற்காக மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் ரத யாத்திரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

பாட்னாவில் நடந்த இந்த நிகழ்ச்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கோவாவில் பேசிய பிரதமர் மோடி மக்கள் இன்னும் 50 நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும் அதன்பின் நிலைமை அனைத்தும் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகவில்லை என்றால் மக்களுக்கு எனக்கு தண்டனை கொடுங்கள் என கூறி இருந்தார்.

மோடி கூறிய 50 நாட்கள் முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது. ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கவே இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டேதான் இருக்கிறது. மக்களும் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார்கள்.

நாட்டை இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியதற்காக, மக்களின் கொடுக்கும் தண்டனையை ஏற்க பிரதமர் மோடி முச்சந்தியை பார்த்து தயாராக இருக்க வேண்டும்.

ரூபாய் நோட்டு தடை, பணமில்லா பொருளாதாரம் எனக் கூறி குரங்குகளை வைத்து நாடகம் போட்டுவிட்டார் மோடி. மக்கள் மோடி, மோடி என்று கூட்டத்தில் கூறுவதால், மோடி மாயையில் சிக்கி இருக்கிறார். பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் ஒருசில ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அமர்ந்து கொண்டு மோடிக்கு ஆதரவாக கோஷம் போடுகிறார்கள்.

நாட்டில் இப்போது பொதுத்தேர்தல் நடந்தால், பாரதிஜனதா கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது.  உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாரதியஜனதா கட்சியால், ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

click me!