கன்றுக் குட்டியை வெட்டிய காங்கிரஸ் நிர்வாகி மீது நடவடிக்கை - கேரள போலீஸ் டி.ஜி.பி.க்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம்

First Published May 30, 2017, 5:09 PM IST
Highlights
Kerala Congress man who who cut the calf


கேரள மாநிலம், கண்ணூரில் சாலையில் அனைவரும் பார்க்கும் வகையில் கன்றுக் குட்டியை வெட்டிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸ் டி.ஜி.பி.க்கு விலங்குகள் நல ஆர்வலர் அமைப்பான ‘பீட்டா’ கடிதம் எழுதியுள்ளது.

எதிர்ப்பு

மாடுகள், ஓட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகளை சந்தையில் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் சாலையில் மாட்டுக்கறி சமைத்து சாப்பிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலையில்

இதில் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் சாலையில் அனைவரும் பார்க்கும் வகையில் கன்றுக்குட்டியை வெட்டி மத்திய அரசின் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

பீட்டா கடிதம்

இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா, கன்றுக்குட்டி வெட்டிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளது. பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-

தண்டனை தேவை

மாநிலத்தில் விலங்குகளை கொடுமைப்படுத்தப்படுவதை தடுத்து, அதைச் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அந்த செயலில் ஈடுபடும் மனிதர்களுக்கு தகுந்த தண்டனையும் அளிக்க வேண்டும். அவர்களின் மனநிலை அறிந்து மனநிலை மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்ப வேண்டும்.

ஒழிக்க வேண்டும்

கன்றுக்குட்டியை சாலையில் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதை பொதுமக்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் இந்த கொடூரத்தை பார்த்துள்ளனர்.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மிருகங்களை பலியிடுவதை மட்டும் தடை செய்யவில்லை, சந்தையில் மிருகங்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் ஒழிக்க வேண்டும் என்கிறது.

ஆய்வு

விலங்குகளுக்கு கொடுமை செய்யும் நபர்கள் நிறுத்த மாட்டார்கள் என்றும், அவர்களைப் பின்பற்றுவார்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. பாலியல் பலாத்காரம், கொடூர கொலை செய்பவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ததில் விலங்குகளுக்கு கொடூர துன்பம் கொடுப்பவர்கள்தான் இதை அதிகமாகச் செய்கிறார்கள் என்று அமெரிக்க எப்.பி.ஐ. ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!