என்னோட ஃபிட்னசை விட கர்நாடகா வளர்ச்சி ஃபிட்னஸ்தான் முக்கியம்....! மோடிக்கு பதிலளித்த குமாரசாமி

First Published Jun 13, 2018, 1:18 PM IST
Highlights
Karnataka Chief Minister Kumaraswamy responded to Prime Minister Modi


எனது உடல் ஃபிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் ஃபிட்னர் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன் என்று பிரதமர் மோடியின் சவாலுக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி கூறியிருந்தார். தான் செய்யும் உடற்பயிற்யையும் டுவிட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும்படி விராட் கோலி, சாய்னா நெக்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கும் பரிந்துரை செய்தார்.

இதனைக் ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். கோலியின் சவாலை ஏற்ற மோடி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் இன்று பதிவிட்டார். 

அதோடு, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு. 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்து மோடி சவால் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் சவாலுக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி. எனது உடல் ஃபிட்னஸைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் ஃபிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்று முதலமைச்சர் குமாரசாமி பதிவிட்டுள்ளார்.

click me!