8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்!! நீதி கிடைக்க போராடுவேன்.. கமலின் கோபமும் வருத்தமும்

First Published Apr 13, 2018, 10:28 AM IST
Highlights
kamal revealed his angry about asifa issue in twitter


ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு டுவிட்டரில் தனது வருத்தத்தையும் கோபத்தையும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அம்மாநில பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்களை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம், மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் உனா நகரில் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த மாணவியின் தந்தை போலீஸ் விசாரணையின்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நீதி கேட்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு தனது வருத்தத்தையும் கோபத்தையும் கமல் டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father &amp; a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u &amp; won’t forget u</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/984635245818347520?ref_src=twsrc%5Etfw">April 13, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

கமலின் அந்த டுவிட்டர் பதிவில், இந்த வலியை புரிந்துகொள்ள நமது சொந்த மகளாகத்தான் இருக்க வேண்டுமா? அந்த சிறுமியும் எனது மகள்தான். ஒரு ஆணாக, தந்தையாக, குடிமகனாக ஆசிஃபாவிற்கு நடந்த சம்பவத்திற்காக கோபம் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே.. உனக்கு தேவையான பாதுகாப்பை கொடுக்க தவறிவிட்டோம். இனியொரு குழந்தைக்கு இந்த கொடுமை நிகழாமல் இருக்க உனக்கு நீதி கிடைக்க போராடுவேன் என கமல் பதிவிட்டுள்ளார்.
 

click me!