முன்னாள் முதல்வர் குமாரசாமி வீட்டில் திடீர் ரெய்டு - கர்நாடகாவிலும் களமிறங்கிய வருமான வரித்துறை!

First Published May 24, 2017, 9:47 AM IST
Highlights
IT raid on karanataka former chief minister kumarasamy


கர்நாடகா முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சியின்போது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், நடிகை குட்டி ராதிகாவை 2வது திருமணம் செய்து, சர்ச்சையில் சிக்கினார். அதில், இருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவர் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகன் ஆவார்.

இந்நிலையில், குமாரசாமி மீது, பண மோசடி புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்த போலீசார், இந்த வழக்கை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றினர்.

இதைதொடர்ந்து இன்று காலை குமாரசாமியின் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினர், அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்ததும், அவரது கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர், அவரது வீட்டின் முன் திரண்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில், அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. தற்போது, கர்நாடக மாநிலத்திலும் தொடங்கியுள்ளதால், அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

click me!