2022க்குள் 2 கோடி பேருக்கு வீடு : மத்திய அரசு திட்டம்!

First Published Dec 30, 2016, 11:02 AM IST
Highlights


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் 2 கோடிப் பேருக்கு வீடு கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி தகுதியுள்ள பெண்களுக்கு மாநில அரசுகள் நிலத்தை ஒதுக்கினால், வீடுகட்ட தேவையான நிதி ஒதுக்கித் தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் நலிவடைந்தவர்களுக்கு கட்டித்தரப்படும் இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், எரிவாயு சிலிண்டர் இணைப்புகளும் கூடுதலாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 60 சதவீத வீடுகள், மண் குடிசைகளில் வாழும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ராம் கிரிபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

வீடு கட்டுவதற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்படுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கழிவறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

click me!