ஒரே நேரத்தில் நோய்க்கால விடுப்பில் சென்ற ஊழியர்கள்.. 86 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..

By Ramya sFirst Published May 8, 2024, 3:28 PM IST
Highlights

ஒரே நேரத்தில் அதிகமான பணியாளர்கள் நோய்கால விடுப்பு விடுப்பில் சென்றதால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரே நேரத்தில் அதிகமான பணியாளர்கள் நோய்கால விடுப்பு விடுப்பில் சென்றதால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சுமார் 300 மூத்த கேபின் குழு உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறியதாகவும், தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ததையடுத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பணியாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள்: சாம் பிட்ரோடா கருத்தால் சர்ச்சை!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது ."எங்கள் கேபின் குழுவில் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறினர்., நேற்றிரவு தொடங்கி, விமானம் தாமதம் மற்றும் ரத்துசெய்யப்பட்டது. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் குழுவினருடன் பேசி வருகிறோம்  நிலையில், இதனால் எங்கள் விருந்தினர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுவதை குறைக்க நாங்கள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்." என்று தெரிவித்தார்.

மேலும் "இந்த எதிர்பாராத தடங்கலுக்கு நாங்கள் எங்கள் விருந்தினர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இந்த சூழ்நிலை நாங்கள் வழங்க முயற்சிக்கும் சேவையின் தரத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை வலியுறுத்துகிறோம்," என்று தெரிவித்தார்..

ரத்து செய்வதால் பாதிக்கப்படும் விருந்தினர்களுக்கு முழுப் பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது மற்றொரு தேதிக்கு பயண மறு திட்டமிடல் வழங்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பயணிகள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தங்கள் விமானங்களின் திடீர் ரத்து குறித்து புகார் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் உள்ள பணியாளர்கள், டாடா குழுமத்துடன் இணைந்த பிறகு ஊழியர்களை சமமாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும் சில ஊழியர்களுக்கு குறைந்த பணியிடங்கள் வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இழப்பீட்டுத் தொகுப்பின் முக்கிய பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் டாடா குழுமத்தின் முழு-சேவை கேரியர் விஸ்டாரா விமானிகளின் பிரச்சனைகளால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விஸ்தாரா விமானிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது, இது ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கான செயல்பாட்டில் உள்ளது, புதிய ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, விமானங்களை இயக்கும் விமானிகளுக்கான பட்டியல்கள் மற்றும் அவர்களின் சம்பளப் பேக்கேஜ்களின்பற்றிய ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

click me!