யானை மேலிருந்து கீழே விழுந்த துணை சபாநாயகர்...! வைரலாகும் வீடியோ!

Oct 8, 2018, 3:35 PM IST

தனது சொந்த தொகுதியை பார்வையிட சென்ற பாஜகவின் மூத்த தலைவரும், அசாம் மாநிலத்தின் துணை சபாநாயகரும், யானை மேலிருந்து கீழே விழுந்தார். அசாம் மாநிலத்தின் துணை சபாநாயகராக இருப்பவர் கிரிபாநாத் மல்லாஹ். 

பாஜகவின் மூத்த தலைவரான இவர் நேற்று முன்தினம், அவரது சொந்த தொகுதியான கரிம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரடபரிக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிரிபாநாத், தொகுதி முழுவதும் சுற்றி வருவதற்காக யானை ஒன்றையும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, யானை மீதமர்ந்த கிரிபாநாத், தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக புறப்பட்டார். 

ஆனால், சில நிமிடங்களிலேயே நிலைதடுமாறி துணை சபாநாயகர் கிரிபாநாத், கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தொண்டர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் விரைந்து, அவரைக் காப்பாற்றினர். யானை மீதிருந்து சபாநாயகர் கிரிபாநாத், கீழே விழும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.