பக்ரீத் பண்டிகை கோலாகலம்.. மத நல்லிணக்கதை பறைசாற்றும் ஈகை திருநாள் கூறுவது என்ன..?

By Thanalakshmi V  |  First Published Jul 9, 2022, 12:33 PM IST

இஸ்லாமிய மக்களால் ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆடுகள் குர்பனி கொடுக்கப்பட்டு, இறைச்சிகளை அண்டை வீட்டாருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பகிரிந்து அளிப்பது வழக்கம்.


இஸ்லாமிய மக்களால் ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆடுகள் குர்பனி கொடுக்கப்பட்டு, இறைச்சிகளை அண்டை வீட்டாருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பகிரிந்து அளிப்பது வழக்கம். இதனால் தமிழகம் முழுவதும்  கால்நாடை சந்தைகளில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது.

Tap to resize

Latest Videos

இஸ்லாமியர்களின் தூதுவரான இப்ராஹீம், தனது ஒரே மகனாக இஸ்மாயிலை கடவுளின் வேண்டுகோளுக்கிணங்கி பலியிடுவதற்கு முன் வந்தார். இதனால் மனம் இறங்கிய கடவுள், சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி அதனை தடுத்து நிறுத்தி ஒரு ஆட்டினை அனுப்பினார். மேலும் இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டினை அறுத்து பலியிடுமாறு கட்டளையிட்டார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இஸ்லாமிய மக்களால் தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. 

மேலும் படிக்க:அம்மாடியோவ்.. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் இத்தனை கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையா?

ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் ஜூலை 10 ஆம் தேதியான இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நாளில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துவர்.

மேலும் படிக்க:அலர்ட் !! நாளை மறுநாள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா..?

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஆடு, மாடு சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. பக்ரீத்பண்டிகை என்பதால் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிலோ ஆட்டு இறைச்சி விலை 1000 ரூபாய் வரை விற்கப்படலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். அதேபோல் வழக்கத்தை விட முழு ஆட்டின் விலை ஆயிரம் முதல் 4000 வரையில் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பிரபலமான கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும்  ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..

click me!