33 மாத ஊதியம் ரூ.23 லட்சத்தை திருப்பித் தந்த பிஹார் பேரிசாரியர் திடீர் பல்டி: வங்கிக்கணக்கில் பணமில்லை!

Published : Jul 09, 2022, 12:12 PM IST
33 மாத ஊதியம் ரூ.23 லட்சத்தை திருப்பித் தந்த பிஹார் பேரிசாரியர் திடீர் பல்டி: வங்கிக்கணக்கில் பணமில்லை!

சுருக்கம்

வேலை செய்யாமல் ஊதியம்  வாங்கியது மனதை உறுத்தியது என்று தனது 33 மாத சம்பளம் ரூ.23 லட்சத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பி அளித்த இந்தி பேராசிரியர், தான் பேசியதற்கும், எழுத்துப்பூர்வமாக அளித்த கடிதத்தையும் திரும்பப் பெறுவதாகக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளார்.

வேலை செய்யாமல் ஊதியம்  வாங்கியது மனதை உறுத்தியது என்று தனது 33 மாத சம்பளம் ரூ.23 லட்சத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பி அளித்த இந்தி பேராசிரியர், தான் பேசியதற்கும், எழுத்துப்பூர்வமாக அளித்த கடிதத்தையும் திரும்பப் பெறுவதாகக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிஹாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷ்வர் கல்லூரியில் இந்தி மொழித் துறையில் துணைப் பேராசரியராகப் பணியாற்றி வருபவர் லாலன் குமார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திமொழியில் முதுகலைப்பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 33 வயதான லாலன் குமார் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து நிதிஷ்வர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தனது 33மாத ஊதியமான ரூ.23 லட்சத்து 82ஆயிரத்து 228 அம்பேத்கர் பிஹார்பல்கலைக்கழகத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை அனுப்பி வைத்தார். லாலன் குமார் எழுதிய கடிதத்தில் “ கடந்த 3 ஆண்டுகளாக நான் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை. எந்த மாணவர்களும் வகுப்புக்கு வரவில்லை. எதற்காக எனக்கு ஊதியம் தர வேண்டும். கொரோனா காலத்தில்கூட ஆன்லைன் வகுப்பில் சில மாணவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்.

5 ஆண்டுகளாக வேலை செய்யாமல் ஊதியம் வாங்கினால், என்னை கல்விமுறை சபித்துவிடும். நான் முதுகலைத் துறைக்கு பணிமாற்றம் கோரி 6 முறை விண்ணப்பித்தேன், ஆனால், நிராகரிக்கப்பட்டேன். நான் இங்கு சேரும்போது முதுகலைப் பிரிவுக்கு வகுப்பெடுக்கவே வந்தேன். என்னைவிட தகுதியில் குறைவாக இருக்கும் சிலர் அந்தப் பதவியில் உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். லாலன் குமார் பேட்டியும், அவர் எழுதிய கடிதமும் வைரலானது. 

இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி! சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 குறைக்க அரசு உத்தரவு

சமூக வலைத்தளங்களில் லாலன் குமார் செயலை நெட்டிசன்கள் பாராட்டி, அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், பேராசிரியர் லாலன் குமார் திடீரென பல்டியடித்து, பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கடிதத்தையும், தான் பேசியதையும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்து, மன்னிப்புக் கோரியுள்ளார்.
லாலன் குமார் எழுதிய மன்னிப்புக் கடிதத்தில் “ நான் முதுகலைப் பிரிவுக்கு மாற்றக் கோரி 6முறை கடிதம் எழுதினேன்.

அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் வருதத்தில் இருந்தேன்.என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததால் என்னுடைய ஒட்டுமொத்த ஊதியத்தையும் காசோலை மூலம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அதன்பின் என்னுடைய சக மூத்த ஊழியர்களுடன் பேசுகையில்,நான் செய்தது தவறு எனத் தெரிந்தது.

ட்விட்டருக்கு கல்தா ! ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க் பாயும் வழக்கு

நான் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று வருந்தினேன். கல்லூரி, பல்கலைக்கழக விதிகளை பின்பற்றி ஒருவர் நடக்க வேண்டும். எதிர்காலத்தில் உணர்ச்சிவசப்படாமல், என்னால் முடிந்த அளவு சிறப்பாகப் பணியாற்றுவேன். நான் எழுதிய கடிதம், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் நானாகவேதிரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கல்லூரிப் பேராரிசியர் ஒருவர் கூறுகையில் “  லாலன் குமார் அளித்த காசோலையில் பணமில்லை. அவரின் வங்கிக்கணக்கில் அதாவது மிதான்புராவில் உள்ள எஸ்பிஐ கிளையில் லாலன் குமார் கணக்கில் 968 ரூபாய் மட்டுமே இருப்பில் உள்ளது. இந்த காசோலையை கல்லூரி நிர்வாம் பெற்றுக்கொண்டது. இந்த காசாோலையை டெபாசிட் செய்தால், செக் பவுன்ஸ் மோசடியில் லாலன் குமார் வழக்கைச் சந்திப்பார்,சிறைக்குகூட செல்வார்” எனத் தெரிவித்தார்

மற்றொரு பேராசிரியர் கூறுகையில் “ லாலன் குமார் நடத்தியது வெறும் நாடகம். ஊடகத்தையும், சமூக வலைத்தளத்தையும் தனது பக்கம் திருப்பவே இவ்வாறு செய்துள்ளார். தன்னை முதுகலைப் பிரிவுக்கு மாற்றவே இவ்வாறு நாடகமாடியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹூவாய் நிறுவனமும் சிக்குகிறது? ரூ.750 கோடிக்கு கணக்கு கேட்கும் வருமானவரித்துறை

இ்ந்நிலையில் லாலன் குமார் வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கினங்க கல்லூரி நிர்வாகம் காசோலையை திருப்பி அளித்துள்ளது. இருப்பினும் காசோலையை நகல் மட்டும் வழங்கும்படி லாலன் குமாரிடம் கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!