அமர்நாத்தில் நடந்த பயங்கரம்.. பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு.. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!

By vinoth kumar  |  First Published Jul 9, 2022, 10:45 AM IST

அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தேதார் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தேதார் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த 30-ம் தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க;- Watch : அமர்நாத் பனி குகை அருகே மேக வெடிப்பு! திடீர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்!

இதனிடையே, இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கப்பட்டது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே நேற்று  ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. 

மேலும் படிக்க;- ரயில் பயணிகளுக்கு இனி கவலையே இல்லை.. சூப்பர் நியூஸ் சொன்ன ரயில்வே துறை.!

அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது. வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டதில் அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

click me!