அய்யோ ஆண்டவா.. இந்தியாவிலும் நுழைந்தது குரங்கு காய்ச்சல்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2022, 10:10 AM IST
Highlights

பல நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் முதல் முறையாக  கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்த  வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பல நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் முதல் முறையாக  கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்த  வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இது குரங்கு அம்மையாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கபளீகரம் செய்துள்ளது. இந்த வைரசால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்டுகளாகியும் முழுவதுமாக கொரோனா வைரஸில் இருந்து விடுபட முடியாமல் உலகம் திணறி வருகிறது. இதற்கிடையில் மற்றொரு அச்சுறுத்தலாக  மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் மனித சமூகத்தை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சமீப காலமாக இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,  ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்: Sri Lanka: மீண்டும் எரியும் இலங்கை; தப்பி ஓடிய கோத்தபய ரணில் விக்ரமசிங்கே

இதையும் படியுங்கள்: எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. கோத்தபய ராஜபக்சேவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!

ஆப்பிரிக்காவின் தொலைதூரப் பகுதிகளில் இந்த வைரஸ் மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக உள்ளது, 1858ஆம் ஆண்டு குரங்குகளின் மூலம் கண்டறியப்பட்டதால் இதற்கு குரங்கு அம்மை என பெயரிடப்பட்டுள்ளது,  தற்போதைய உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதுவரை 59 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது என்றும், இதுவரை இந்த அம்மையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதுடன், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.

பெரும்பாலும் வெளிநாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு மாணவர்கள் வாயிலாக, பயணிகள் மூலமாகவும் இது பரவுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒருவேளை குரங்கு அம்மையாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர், ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பான மாதிரிகளை மருத்துவர்கள் தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சோதனை முடிவு இன்னும் வெளிவரவில்லை, இந்நிலையில் அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், அவரது குடும்பத்தினருக்கும் மேற்குவங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மேற்கு மிட்னாபூரை சேர்ந்தவர் என்பதும், உடலில் ஒருவித சொரி மற்றும் பிற அறிகுறிகள் காணப்பட்டதால் அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இது குரங்கு அம்மையாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அதற்கான மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். மாணவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் அது அவருக்கு வந்திருக்க கூடும் என்றும், ஆனால் இதுவரை எந்த ஆபத்தும் இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்திலிருந்து குரங்கு அம்மை சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!