அமர்நாத் புனித குகை ஆலயம் அருகே ஏற்பட்ட மேக வெடிப்பால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமர்நாத் புனித குகை ஆலயம் அருகே ஏற்பட்ட மேக வெடிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயிரிழந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இங்கு பணியால் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பனி லிங்கத்தை வழிபட அமர்நாத் நோக்கி செல்கின்றனர். இந்த நிலையில், இன்று அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே மேக வெடிப்பு ஏற்பட்டது. முன்னதாக அங்கு கனமழை பெய்து வந்தது.
இதையும் படிங்க: அமர்நாத் பனி குகை அருகே மேக வெடிப்பு! திடீர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்!
மேலும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள முகாம்களில் தங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் குகைப் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகம் வெடிப்பால் புனித குகைக்கு அருகில் உள்ள இரண்டு அன்னதான முகாம்கள் பாதிக்கப்பட்டன. மேலும் கனமழையால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனிடையே அமர்நாத் புனித குகை ஆலயம் அருகே ஏற்பட்ட மேக வெடிப்பால் இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அந்த கடைசி சந்திப்பு.. என் நெருங்கிய நண்பர் ஷின்சோ அபே - பிரதமர் மோடி இரங்கல்!
மேலே உள்ள புனித குகையில் 3 பெண் சடலங்களும் 5 ஆண் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் கீழே உள்ள புனித குகையில், 2 பெண் சடலங்களும் 3 ஆண் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 15 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 40 பேர் மாயமாகியுள்ளனர். இதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்பு பணியிலும் இயற்கை பாதிப்புகளை சரி செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அமர்நாத் மேக வெடிப்பால் உயிரிழந்தவர்களுகு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, களத்தில் உள்ள அதிகாரிகளுடன் நிலைமை குறித்து விசாரித்து வருகிறார். இந்நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.