ரயில் பயணிகளுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது ரயில்வே துறை.
கொரோனா பரவலை தடுக்க ரயிலில் முன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருந்தது. அதன்படி முதல் கட்டமாக 192 விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 26ம் தேதி முதல் நெல்லை- செங்கோட்டை இடையேயான முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட தொடங்கியது.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி
மேலும் திருநெல்வேலி -திருச்செந்தூர், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான விரைவு ரயில்கள் கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மணியாச்சியில் இருந்து தினமும் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு துாத்துக்குடி சென்றடையும்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்
அடுத்த கட்டமாக ஜூலை 11ம் தேதி முதல் சேலத்தில் இருந்து கரூர், கோவைக்கு வரும் 11ம் தேதி முதல் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஈரோடு – மேட்டூர் அணை ரயிலும் 11ம் தேதி முதல் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலா வழியில், பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வார் எடப்பாடி.. கேசிபி சொன்ன அதிர்ச்சி தகவல்!