
‘ஆல்ட் நியூஸ்’ இணையதள இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது உ.பி. போலீசார் பதிவு செய்த வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபேக்ட் செக்கிங்கில் கவனம் ஈர்க்கும் ‘ஆல்ட் நியூஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். ஆல்ட் நியூஸ் நிறுவனமானது, போலிச் செய்திகளைக் கண்டறிந்து அவற்றை அம்பலப்படுத்தும். இந்நிலையில், கடந்த 2018-ல் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பரப்பப்பட்ட செய்தியை போலியானது என உறுதி செய்தார். அதனை ட்விட்டரிலும் பதிவிட்டார். இந்த பதிவானது வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக கூறி கடந்த திங்கள்கிழமை அகமதாபாத் போலீசார் கமது ஜுபைரை கைது செய்தனர். இந்த கைதுக்கு நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- ed raid vivo: விவோவின் மெகா மோசடி! ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு திருப்பியது அம்பலம்:அமலாக்கப்பிரிவு பகீர்
இந்நிலையில், ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், டுவிட்டரில் புதிய பதிவுகளை பதிவிடக்கூடாது, உ.பி.யின் சிதாப்பூர் நீதிமன்ற எல்லைப்பகுதியை விட்டும் ஜூபைர் செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- எளிமையாக நடந்து முடிந்த பஞ்சாப் முதல்வர் திருமணம்… வித்தியாசமான முறையில் பரிசு கொடுத்த பாஜக தலைவர்!!