
ஜெ.இ.இ மெயின்ஸ் 2022 தேர்வின் முதன்மை அமர்வு 1-க்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை, (National Test Agency) விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதில் முதல் தாள் (E மற்றும் BTech) மற்றும் இரண்டாம் தாள் (BArch மற்றும் BPlanning) ஆகிய இரண்டிற்கும் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அதாவது jeemain.nta.nic.in இல் பார்த்துக்கொள்ளலாம். ஜெ.இ.இ மெயின்ஸ் 2022 தேர்வின் முதன்மை அமர்வு 1-க்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அதை தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க: எளிமையாக நடந்து முடிந்த பஞ்சாப் முதல்வர் திருமணம்… வித்தியாசமான முறையில் பரிசு கொடுத்த பாஜக தலைவர்!!
தெர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
இதையும் படிங்க: உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிரிய #save soil.. சத்குரு மண் காப்போம் இயக்கத்தின் அடுத்த சாதனை..
நேற்று, ஜெ.இ.இ மெயின்ஸ் 2022 தேர்வின் முதன்மை அமர்வு 1-க்கான விடைகளை தேசிய தேர்வு முகமை, (National Test Agency) வெளியிட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜெ.இ.இ மெயின்ஸ் 2022 தேர்வின் முதன்மை அமர்வு 1-க்கான விடைகளை அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை, (National Test Agency) ஜூன் 23, 24, 25, 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.