எளிமையாக நடந்து முடிந்த பஞ்சாப் முதல்வர் திருமணம்… வித்தியாசமான முறையில் பரிசு கொடுத்த பாஜக தலைவர்!!

By Narendran SFirst Published Jul 7, 2022, 11:00 PM IST
Highlights

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் சண்டிகரில் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் அவரது திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா திருமண பரிசு கொடுத்துள்ளார். 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் சண்டிகரில் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் அவரது திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா திருமண பரிசு கொடுத்துள்ளார். நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கி பின்னர் அரசியலுக்குள் நுழைந்து படிபடியாக உயர்ந்து தற்போது பஞ்சாப் முதலமைச்சராக உள்ள பகவந்த் மான், இன்று சண்டிகரில் குர்ப்ரீத் கவுர் என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். பகவந்த் மானுக்கு ஏற்கனவே திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆகியுள்ளது. பகவந்த் மானின் முதல் மனைவியான இந்தர்ஜித் கவுரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். பகவந்த் மான் மற்றும் அவரது முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தர்ப்ரீத் மற்றும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல்வர் பகவந்த் மான் உடைய மகள் சீரத் கவுர் மான் மற்றும் மகன் தில்சான் மன் இருவரும் தனது தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து இருந்து இந்தியா வந்தனர்.

இதையும் படிங்க: 2வது திருமணம் செய்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.. பெண் யார் தெரியுமா ?

இந்த நிலையில் பக்வந்த் மானின் சகோதரி மற்றும் தாய் இருவருமே பக்வந்த் மான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதுமட்டுமின்றி மணமகளைத் தேடும் பொறுப்பையும் அவர்களே ஏற்றனர். அதன்படி, குர்ப்ரீத் கவுரை பார்த்து பக்வந்த் மானுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். குர்ப்ரீத் கவுர், குருக்ஷேத்ரா மாவட்டத்தின் பெஹோவா நகரைச் சேர்ந்தவர். 32 வயதான இவர், விவசாயியின் மகள். இவரது குடும்பத்தினரும் பகவந்த் மானின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாகவே குடும்ப நண்பர்களாக உள்ளனர். மேலும் குர்பிரீத் சிங் கவுர் ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர். அம்பாலாவில் மருத்துவம் படித்த இவரது குடும்பம் ஆறு மாதங்களுக்கு முன்பு பஞ்சாபில் உள்ள மொஹாலிக்கு குடிபெயர்ந்தது. இவரது மூத்த சகோதரிகள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். குர்ப்ரீத் கவுர் ஹரியானாவில் உள்ள மகரிஷி மார்க்கண்டேஷ்வர் மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா... இதுதான் காரணமா?

டாக்டர் குர்ப்ரீத் கவுர் 48 வயதான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மானுக்கு அவரது தேர்தல் பிரச்சாரங்களில் உதவியதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா தனது வாழ்த்துக்களை அனுப்பினார். மேலும் பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா பகவந்த் மானின் திருமணத்திற்கு பரிசாக வழங்கிய 568 ரூபாய் மதிப்புள்ள பூச்செடியின் ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில், பகிர்ந்துள்ளார். பகவந்த் மானுக்கு திருமண நாளில் வழங்கப்படும் பூங்கொத்து ஒன்றை ஆர்டர் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் திருமண விழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Sent flowers and Best wishes message to ji on his wedding. pic.twitter.com/70tGsHWqEX

— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga)
click me!