பாலியல் வன்கொடுமைகள், கொலைகள்.. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அரங்கேறிய அசம்பாவிதங்கள்

By karthikeyan VFirst Published Jun 18, 2021, 5:25 PM IST
Highlights

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில், போராட்டம் என்கிற பெயரில் கற்பழிப்புகள், விபச்சாரம், கொலைகள் என வக்கிரமான மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. விவசாயிகள் போராட்டத்தின் இருண்ட பக்கம் ஒன்று இருக்கிறது.
 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த பேரணியில் வன்முறை வெடித்தது.

விவசாயிகள் போராட்டமே, இந்தியாவின் மீது அவதூறு பரப்பி, சர்வதேச அரங்கில் இந்தியாவையும் மோடி அரசாங்கத்தையும் தவறாக சித்தரிக்க அந்நிய சக்திகள் முயன்ற சதித்திட்டம் அம்பலமானது.

விவசாயிகள் போராட்டத்தில், போராட்டம் என்ற பெயரில் கற்பழிப்புகள், கொலைகள் என வக்கிரமான மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. விவசாயிகள் போராட்டத்தின் இருண்ட பக்கம் ஒன்று இருக்கிறது. அது முழுக்க முழுக்க பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நிறைந்த கொடூர பக்கம். 

விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்கள் மீது போராட்டக்காரர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன், பாலியல் ரீதியாக பல தொல்லை கொடுத்ததாகவும், இந்தியா டுடே பத்திரிகையாளர் ப்ரீத்தி சௌத்ரி தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தேசியளவில் பெரும் பரபரப்பையும் விவசாயிகள் போராட்டத்தின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

பெண்கள் மீதான இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் அம்பலப்பட்டும் போராட்டக்காரர்கள் திருந்தவில்லை. டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள டெல்லி புறநகர்ப்பகுதியான டிக்ரி பகுதியில் 26 வயது இளம்பெண்ணை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த கொடூர சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் அந்த பெண் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. சன்யுக்தா விவசாய சங்க தலைவர் யோகேந்திரா யாதவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தில் அரங்கேறிய இந்த பாலியல் வன்கொடுமை சம்பவமும் தேசத்தையே உலுக்கியது.

விவசாயிகள் என்ற போர்வையில், பஞ்சாபை சேர்ந்த பெண் செவிலியர் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவமும் அம்பலப்பட்டது.

Shocking news!!!
Molestation and rape incident reported from Tikri Border. Punjabi nursing assistant molested and raped by criminal elements in disguise as farmers. Why no one is reporting and taking note. A detailed story on the molestation & rape in this thread. Must read. pic.twitter.com/0SqULwxms1

— Shivani dhillon (@shivani_sikh)

டெல்லி எல்லை பகுதியான டிக்ரி பகுதியில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு விபச்சாரம் வரை அரங்கேறியது.

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த மோதலில் ஹரியானா மாநிலம் பஹதுர்காவில் ஒரு நபர் உயிருடன் தீயிட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவமும் நடந்தது.

இப்படியாக விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில், வேளாண் சட்டங்களை எதிர்த்ததை விட, சட்ட விரோதமான, வக்கிரமான, வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியதே விவசாயிகள் போராட்டத்தின் சாதனையே தவிர வேறொன்றும் இல்லை.
 

click me!