“மாநில கட்சிகளை காங்கிரஸ் எப்போதும் மதித்ததே கிடையாது…” – வெங்கய்யா நாயுடு ‘கரகர பரபர’ பேட்டி

First Published Jan 1, 2017, 11:49 AM IST
Highlights


பிரதமர் மோடியின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்க்கட்சிகள் பொறாமை அடைந்துள்ளனர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் தெரிவித்ததாவது:-

பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள பெருமை மற்றும் செல்வாக்கை கண்டு எதிர்க்கட்சிகள் பொறாமைபடுகின்றன. இதனால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடுவது வெற்றி பெறாது. இது சந்தர்ப்பாவதம். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தில் ஆரம்பத்தில் அமைதி காத்த எதிர்க்கட்சிகள், இந்த திட்டத்திற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், குறைகளை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியினர் மக்களிடம் செல்லாமல், மீடியாக்களிடமே செல்கின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கிறது. இதனால், மத்திய அரசுக்கு எந்த அச்சுறுத்தலோ, ஆபத்தோ கிடையாது. அவர்கள் கொள்கை அளவிலோ, சமுதாய பிரச்சனைக்காகவோ ஒன்று சேரவில்லை. 

மம்தா தன்னை முன்னிறுத்தி கொள்ள விரும்புகிறார். அனைத்துக்கு உரிமை கொண்டாடும் தலைவராகவே ராகுல் இருக்கிறார். மம்தாவும், திரிணமுல்லும் ஒன்றாக செயல்பட முடியாது. இதனால், அவர்கள் கொள்கையிலும் ஒன்று சேர முடியாது.

சாதாரண மனிதரான மோடி, தற்போது பிரதமராக இருப்பதையும், அவருக்கு தினமும் புகழ் கிடைப்பதையும் எதிர்க்கட்சியினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்துள்ளனர். பிரச்சனை ஏற்படும் காலங்களை தவிர, மற்ற நேரத்தில் மாநில கட்சிகளை காங்கிரஸ் எப்போதும் மதித்தது கிடையாது. மரியாதை அளித்ததும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். 

click me!