'பழைய ரூ.1000,500 வைத்திருந்தால் சிறையில்லை' - மத்திய அரசு வாபஸ்

First Published Dec 29, 2016, 5:32 PM IST
Highlights


நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய இம்மாதம் 30-ந்ததேதி வரை அவகாசம் கொடுத்தது.

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு அதிகமாகவோ, அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாகவோ கையில் வைத்து இருந்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ, பெற்றாலோ அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம், தண்டனை விதிக்க அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வாங்க குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கு முன்  பழைய 500,1000 நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை என்று அவசரமா திருத்தம் செய்து பழைய அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்று கொண்டுள்ளது.

 

click me!