ஏ.ஆர்.ரகுமானுக்கு புதிய பதவி….. தமிழனைப் பெருமைப் படுத்திய சிக்கிம் அரசு…..

First Published Jun 20, 2018, 3:18 PM IST
Highlights
A.R.Raguman appointed as the ambasidor of sikkim state


சிக்கிம் அரசின் மாநில தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  நியமிக்கப்பட்டுள்ளார்..இவர் சிக்கிம் அரசிள் அருமை, பெருமைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தளம் என்றாலே இந்தியாவில் கேரளாவை அடுத்து சிக்கிம் மாநிலம்தான் ஞாபத்துக்கு வரும்.  சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினையும்  பெற்றுள்ளது.  

இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அம்மாநிலம் முழுவதும்  இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இயற்கை போற்றி பாதுகாத்து வரும்  முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் சிக்கிம் மாநில சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான தூதுவராக ஏ.ஆர்.ரகுமானை அம்மாநில அரசு நியமித்தது. இந்த அறிவிப்பை சிக்கிம் முதலமைச்சர்  பவன் சாம்லிங்கால்  வெளியிட்டு  ரகுமான் கவுரவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிக்கிம் அரசின் மாநில தூதுவராக ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் சிக்கிம் மாநிலத்தின் சாதனைகளை தேசிய அளவில் மற்றும் உலக அளவில் கொண்டு செல்லும் பணியை  ஏ.ஆர்.ரகுமான் மேற்கொள்வார் என தலைமை செயலாளர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

click me!