அயோத்தி வழக்கில் அத்வானி, உமாபாரதி, ஜோஷி மீண்டும் சிக்கல்….30-ந் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு….

First Published May 26, 2017, 10:26 PM IST
Highlights
Advani.Uma bharath will attend the court on 30th May


பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி , மத்தியஅமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வரும் 30-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மேலும், பா.ஜனதா தலைவர்கள் வினய் கத்தியார், விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர் சாத்வி ரிதம்பரா, விஷ்னு ஹரி டால்மியா ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் உத்தரவிட்டார்.

பாபர்மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக எல்.கே. அத்வானி(வயது89),முரளி மனோகர் ஜோஷி(வயது 83), உமாபாரதி(வயது57) உள்ளிட்ட 23 மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருந்து. இதில் அத்வானி உள்ளிட்ட 7 பேர் மீது தனியாக ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அலகாபாத் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுவித்தது.

மீண்டும் விசாரணை

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்டு இருந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிமன்றம், அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. மேலும், 2 ஆண்டுகளுக்குள் தினந்தோறும் வழக்கை நடத்தி தீர்ப்பளிக்கவும் சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி  உத்தரவிட்டது. ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வந்த மற்றொரு வழக்கையும், லக்னோ நீதிமன்றமே விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 20ந் தேதியில் இருந்து லக்னோ நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரணை நடந்து வருகிறது. பாபர் மசூதி இடிப்பு தொடப்பாக மற்றொரு வழக்கில் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி நேரில் ஆஜராக ஏற்கனவே ஒரு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்து.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மற்றொரு வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ், “ வரும் 30-ந்தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய இருப்பதால், பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி , மத்தியஅமைச்சர் உமாபாரதி  பா.ஜனதா தலைவர்கள் வினய் கத்தியார், விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர் சாத்வி ரிதம்பரா, விஷ்னு ஹரி டால்மியா ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

 

 

click me!