சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை! பெரியவர்கள் என்றால் என்ன செய்வது? நிர்பயாவின் தாயார் வேதனை

First Published Apr 22, 2018, 2:49 PM IST
Highlights
12 year age limit not accepted- Nirbayas Mother


சிறுமிகள் மீதான பாலியல் குற்றத்துக்கு தூக்கு தண்டனையை வரவேற்கும் நிர்பயாவின் தாயார், வயதில் மூத்தவர்கள் என்றால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதேபோல உத்தரபிரதேசத்ல் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகள் அனுபவித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களைத் தடுக்கக்கோரி குரல்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக அவசர
சட்டம் நிறைவேற்றபடும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளா.

12 வயதுகுட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது பாராட்டுக்குரியது என்றும் வயதில் மூத்தவர்கள் என்றால் என்ன
செய்வது? என்று நிர்பயாவின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் தாயார் இது குறித்து விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.   12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஆனால், வயதில் மூத்தவர்கள் என்றால் என்ன செய்வது? வன்புணர்வைவிட மிகக் கொடுமையான வலி இந்த உலகத்தில் வேறெதுவுமே கிடையாது. இந்த குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நிர்பயாவின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!