'எல் நினோ' எனும் காலநிலை நிகழ்வு காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
’எல் நினோ’ எனும் காலநிலை நிகழ்வு சராசரியாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை வரும் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு எல் நினோ ஆண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியாவின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
"2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு எல் நினோ நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு தயாராகி வருகிறது. இது டெங்கு மற்றும் ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பிற வைரஸ்களை அதிகரிக்கக்கூடும்" என்று உலக சுகாதார அமைப்பு இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் நேற்று (ஜூன்.22) தெரிவித்தார். "காலநிலை மாற்றத்தின் விளைவுகளும், கொசுக்களின் இனப்பெருக்கமும் இந்த நோய்களின் பரவலைத் தூண்டுகின்றன," என்றும் அவர் கூறினார்.
undefined
அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பான (US National Oceanic and Atmospheric Administration (NOAA)) படி, 'எல் நினோ' வெப்பமயமாதலுக்கான புதிய பதிவுகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக எல் நினோ நிகழ்வின் போது சராசரி வெப்பநிலையை ஏற்கனவே அனுபவிக்கும் பகுதிகளில் புதிய பதிவுகள் வரலாம்.
எல் நினோ - என்றால் என்ன?
எல் நினோ நிகழ்வு என்பது பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் காலநிலை ஆகும். இதில் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையைச் சுற்றி சராசரியான கடல் மேற்பரப்பு உயர் வெப்பநிலையை அடையும். உலகமெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கணிசமாக வெப்பநிலை உயரும்.
கடைசியாக எல் நினோ நிகழ்வு 2019ஆம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே நிகழ்ந்தது. அப்போது அதன் தாக்கங்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருந்தன. இந்தியாவில், எல் நினோ தெற்கு அலைவு (ENSO) பருவமழை தாமதத்திற்கு வழிவகுத்தது. அதே நேரத்தில் பிபர்ஜோய் சூறாவளி தாமதத்தில் முக்கிய பங்கு வகித்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் பலா, மாம்பழத்தைக் கண்டிப்பாக தவிர்க்கணுமா? டாக்டர் என்ன சொல்றாங்கனு பாருங்க!!