இயர் பட் இல்லாமல் காதுகளை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்- இதோ..!!

By Dinesh TGFirst Published Dec 4, 2022, 1:53 PM IST
Highlights

மனித உடல் தூய்மையாக இருக்கும் வரை நோய்கள் நம்மை அண்டாது. பல் துலக்குதல், குளித்தல் போன்ற பழக்கங்கள் எப்போதும் நம்மை சுகாதாரமாக வைத்திருக்க உதவும். அந்த வரிசையில் காதுகளையும் சுத்தமாக பராமரிப்பது அவசியமாகிறது.
 

உடலின் மற்ற பாகங்களை விடவும், காதுகள் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. ஏனென்றால் அது மூளையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் உள்ளது. அதனால் காதுகளின் ஆரோக்கியத்தை நாம் முறையாக பராமரித்துவ் வரவேண்டும். பெரும்பாலானோர் காதுகளை இயர் பட் மூலம் சுத்தம் செய்யும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளன. ஆனால் இது அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது. இந்த பழக்கம் முற்றிலும் தவறானது என்பது பல்வேறு வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒருசிலர் பேனா, ஹேர்பின்கள், பேப்பர் கிளிப்புகள் அல்லது டூத்பிக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் அதிகரித்துக் காணப்படுகிறது. அப்படி செய்தால் காதுகள் மற்றும் செவிப்புலன்களுக்கு நிரந்தர சேதம் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அப்போது காதுகளை எப்படித்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.

காது மெழுகு அகற்ற வேண்டாம்

காதுகளுக்குள் சேரும் பசபசப்பை அழுக்கு என்று நம்மில் பலரும் சொல்கிறோம். உண்மையில் அது மெழுகு என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் காது மெழுகு அகற்ற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும் அளவுக்கு அதிகமாக மெழுகு சேரும் போது, அதை அகற்றிவிடலாம். ஒருவேளை அதிகளவில் மெழுகு சேர்ந்து, நீங்கள் அகற்றாமல் விட்டுவிட்டால் பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.

காதுகளை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?

பெரும்பாலானோருக்கு காதுகளை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு இயர் பட்டுகளை பயன்படுத்தும் போதுதான் பிரச்னை உண்டாகுகிறது. அதைவிட்டால் பின் ஊசி, முடியை ஒதுக்கும் ஹேர் பின் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்கின்றனர். இது காதுகளின் தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உண்டாக்கிவிடும். அதனால் எப்போது எச்சரிக்கையும் சுத்தம் செய்யுங்கள்.

ஆரோக்கியம் நிறைந்திருக்கும் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாதவர்கள் இவர்கள் தான்..!!

வீட்டில் காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

வாரத்தில் 3 முதல் 5 நாட்களுக்கு, நான்கு துளி பாதாம் எண்ணெயை காதுக்குள் விடவும். அதை அடுத்து, எண்ணெய் விட்ட காது மேலே இருக்கும் விதமாக படுத்துக்கொள்ளவும். பிறகு நீங்கள் உங்களுடைய வேலையை பார்க்கச் செய்யலாம். இதையடுத்து ஒரு வாரத்துக்குள் காதுகளில் சேர்ந்திருக்கும் அழுக்கு கட்டிகள் வெளியே வந்து விழும். பெரும்பாலும் இரவில் தூங்கும் போது காது சுத்தமாக இருப்பது முக்கியம்

காதுகளை சுத்தம் செய்வதற்கு என்று தனியாக மருத்துவரைச் சென்று சந்திக்க வேண்டாம். அது வீண் செலவு தான். எனினும் உங்களுக்கு அதிகப்படியான அழுக்கு, வலி போன்ற பிரச்னை இருந்தால் காது அழுக்குகளை சுத்தம் செய்யுங்கள். இது எளிய முறையில் தீர்வை பெற உதவும்.
 

click me!