மலேரியாவை ஓடஓட விரட்டும் சூப்பர் மூலிகை... அட இது நம்ம பாட்டி காலத்து வைத்தியம்ங்க...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 27, 2018, 2:01 PM IST
Highlights

மலேரியா காய்ச்சல் அதன் கொடுரத்தை ஒவ்வொரு வருடமும் காட்டிவருகிறது. சாக்கடைகள் அதிகமுள்ள மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அருகில் வாழ்பவர்களைதான் அதிகம் தாக்குகிறது இந்த மலேரியா. இந்நோய்க்கு மிக முக்கிய காரணம் கொசு தான்.
 

மலேரியா காய்ச்சல் அதன் கொடுரத்தை ஒவ்வொரு வருடமும் காட்டிவருகிறது. சாக்கடைகள் அதிகமுள்ள மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அருகில் வாழ்பவர்களைதான் அதிகம் தாக்குகிறது இந்த மலேரியா. இந்நோய்க்கு மிக முக்கிய காரணம் கொசு தான்.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 10 இலட்சத்தில் இருந்து 20 இலட்சம் பேர் வரைய் கொசுக்கள் மூலம் நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனராம். அதில், பாதிக்குப் பாதி பேர் இறப்பது மலேரியாவால் தான்.

உலகச் சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி ஆப்பிரிக்காவில் மட்டும் ஒவ்வொரு 45 விநாடிகளுக்கும் ஒரு குழந்தை மலேரியாவால் இறந்து போகிறது. அதிர்ச்சி அளித்தாலும் இது உண்மைதான்.

இப்படிப்பட்ட மலேரியாவை இந்த அரிய வகை மூலிகை மூலம் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் முடியும். அப்படியென்ன தாவரம் என்று பார்க்கலாமா?

மரச் சூரியக்காந்தி

மரச் சூரியக் காந்தி (அ) காட்டுச் சூரியக் காந்தி என்று அழைக்கப்படும் இது சாலையோரங்களில் மலர்ந்து கிடக்கும். இதன் மலர்களைக் கொண்டு மலேரியா காய்ச்சலை குணமாக்கலாம். 

மரச் சூரியக் காந்தி பூக்கள் நுண்கிருமிகளை கூட போக்கும். பூஞ்சை காளான்களை அழிக்கும். நோய் எதிர்ப்பு தன்மை அதிகமிருப்பதால் மலேரியா காய்ச்சலை தணிக்கும். சரி. இந்த பூவைக் கொண்டு மலேரியாவை குணமாக்கும் மருந்து தயாரிப்பது எப்படின்னு பார்க்கலாம். 

தேவையான பொருட்கள். 

மரச் சூரியக் காந்தி பூக்கள், தனியா, பனங்கற்கண்டு. 

செய்முறை:

மரச் சூரியக் காந்தியின் ஒரேயொரு பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை தேக்கரண்டி தனியா, சிறிது பனங்கற்கண்டை சேர்த்து கசாயம் தயாரிக்க வேண்டும். இவற்றை பாத்திரம் ஒன்றில் எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். இதனை வடிகட்டினால் மருந்து தயார். 

பருகும் முறை:

இதனை தினமும் பருகினால் மலேரியா உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

click me!