உடலுக்கு அவசியம் வேண்டுவது தூக்கம் தான். உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நிம்மதியாக தூங்கி எழுந்துவிட்டாலே போதும், நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்பதை பரிபூரணமாக நம்பலாம்.
இன்றைய காலத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னை உறக்கம். இது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் தலையாய பிரச்னையாக உள்ளது. பொதுவாக உறக்கத்துக்கான முக்கியப் பிரச்னையாக இருப்பது முறையற்ற உணவுப் பழக்கமும் மற்றும் உழைப்பே இல்லாமல் இருப்பதும் தான். இரவில் தூங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். ஆனால் அதேசமயத்தில் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டுவிட்டு படுத்தால், உறக்கம் தடைபடும். அந்த வகையில் இரவில் நாம் சாப்பிடக் கூடாத உணவுகளை குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தேநீர் இரவு
ஒருசிலருக்கு சாப்பாடு சாப்பிட்டவுடன் தேநீர் அல்லது காப்பி குடித்துவிட வேண்டும். ஆனால் இந்த பழக்கத்தை இரவிலும் கடைப்பிடித்தால் உடல் சீக்கரமே பாழாகிவிடும். வெறும் தேநீர் மற்றும் காப்பி மட்டுமின்றி சாக்லேட், சோடா பானங்கள், சாக்லேட் மில்க் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதும் ஆபத்து தான். இந்த பானங்களில் கேஃபைன் உள்ளது, இது மூளையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இரவு தூக்கத்துக்கு முன்பு இப்பானங்களை குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் பாதிக்கப்படும்.
கொழுப்பு உணவுகள் கூடாது
கொழுப்பு நிறைந்த உணவுகளில் தூக்கத்தை பாதிக்கும் பண்புகள் உள்ளன. குறிப்பாக ஒமேகா 3 போன்ற கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால், தூக்கம் நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படும். அதனால் நெய், வெண்ணெய் போன்றவற்றை இரவில் சாப்பிடாதீர்கள். அவை சேர்க்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவது உடலை சீக்கரமே பாதிக்கச் செய்துவிடும்.
மைதா சேர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
நூடூல்ஸ், பிரெட், பாஸ்தா போன்ற மைதாவை கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை தயவு செய்து இரவில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். இதனால் தூக்கமின்மை பிரச்னை தான் அதிகரிக்கும். மேலும் இதுபோன்ற உணவுகளால் செரிமானம் பெரிதும் பாதிக்கப்படும். ஆரம்பத்தில் இந்த உணவுகளால், பெரியளவில் பிரச்னையில்லை என்று தோன்றும். ஆனால் போகப் போக உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் எழுந்து. குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுவது கூட அறிகுறிகள் தான். அதனால் ஏற்படும் பாதிப்புகள் பிற்காலத்தில் தான் தெரியவரும்.
வியக்கவைக்கும் அளவுக்கு நன்மைகளை வாரி வழங்கும் விளக்கெண்ணெய்..!!
ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்
நாம் உண்ணும் உணவுகளில் சமளவு ஊட்டச்சத்து விகிதம் இல்லை என்றால், தூக்கம் நிச்சயம் தடைபடும். அதனால் எப்போதும் ஊட்டச்சத்து நிறைவாக கொண்ட உணவுகளை சரிவிகிதத்தில் எடுத்து வரவேண்டும். குறிப்பாக வைட்டமின் குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிட்டால் உடல்நலன் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக வைட்டமின் கே, கால்சியம் , இரும்பு, வைட்டமின் டி , மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் எடுத்துக்கொண்டு வருவது உறக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும்.
குளிர்காலம் உங்களை நெருங்குகிறது- சரும பராமரிப்பில் கவனம் செலுத்த முக்கிய டிப்ஸ்..!
உணவுக்கு பின் சிறிது நேரம்
எப்போதும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டால், கொஞ்ச நேரம் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். இது உணவு சாப்பிடும் எல்லா நேரங்களுக்கும் பொருந்தும். முடிந்தவரை இரவு உணவை 9 மணிக்கு முன் சாப்பிட்டு விடுவது நல்லது. சாப்பிட்டவுடன் நீங்கள் உறங்கச் சென்றால் புற்றுநோய் பாதிப்புக் கூட வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இலகுவான தன்மை கொண்ட உணவுகளை இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்லுங்கள். இதனால் உங்களுடைய உடலும் நலமும் காக்கப்படும்.