இன்றைய காலத்தில் பலருக்கும் இருதயம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இதற்கு ஒவ்வொருவருடைய வாழ்வியலிலும் செய்துகொண்ட மாற்றங்களே காரணமாக உள்ளன. அதை களைய நாம் எடுக்கும் சின்ன முயற்சிகள் கூட பலனை தருவதாக இருக்கும்.
எப்போதும் சுறுசுறுப்பாகவும், இடைவெளியில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கும் உறுப்பு தான் இருதயம். நமக்காக மட்டுமே அது துடித்துக்கொண்டுள்ளது. நாம் நிம்மதியாக தூங்கும் போது கூட, இருதயம் நமக்காக செயல்படுகிறது. ஓய்வின்றி உழைக்கும் இருதயம் ஒரு நொடி அயர்ந்துவிட்டால் கூட நமக்கு ஆபத்து தான். அப்படிப்பட்ட இருதயத்தை நாம் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் இளைய தலைமுறையினரைச் சேர்ந்தவர்கள் கூட, எளிதாக இருதய நோய் பாதிப்புக்கு ஆளாகுகின்றனர். இன்னும் பலர் பாதிப்பு ஏற்படுவதற்கான விளிம்பில் உள்ளனர். இதற்கு காரணம் வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான். அதை எப்படி சரிசெய்யலாம் என்பதை தான், நாம் இப்போது விரிவாக பார்க்கவுள்ளோம். இதை படித்துவிட்டு நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி கூட, இருதய நலனுக்கு ஊக்கமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எப்போதும் காலை உணவை தவிர்ப்பது கூடாது
அன்றைய நாளில் நம் உழைப்பையும் அதனால் கிடைக்கும் உடல்நலனையும் முடிவு செய்வது காலை உணவுகள் தான். அதை எப்போதும் நாம் தவிர்க்கக்கூடாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காலை உணவு அவசியமானதாகும். காலை நாம் சாப்பிடும் உணவு அளவுடன் இருப்பது நல்லது. மென்மையான மற்றும் அதே சமயத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பது மிகவும் முக்கியம். மாவுச் சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொறித்த உணவுகள், அதிக இனிப்புக் கொண்ட உணவுகளை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது.
நார்ச்சத்து உணவுகள் மிகவும் முக்கியம்
நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட்டால், உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கிவிடும். இதனால் ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் நார்ச்சத்து உணவுகளை காலை வேளையில் எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சக்கரையில் அளவு கட்டுக்குள் இருக்கும். பொதுவாக முழு தானியம், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து உணவுகள் நிறைந்து காணப்படுகின்றன. காலையில் நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடும் போது, அன்றைய நாள் முழுவதும் உழைப்பதற்கான சத்து பூரணமாக கிடைத்துவிடுகிறது.
பக்கத்தில் செல்போனை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்..?? எச்சரிக்கை பதிவு..!!
தனிமை உடல் ஆரோக்கியத்துக்கு கேடு
இன்று பலரும் வீட்டிலிருந்தபடியே தான் வேலை செய்கின்றனர். இதனால் அவர்களிடம் உடல் உழைப்புக்கான வாய்ப்பு குறைவு தான். அலுவலகம் சென்று வந்தால், நமது உடலுக்கு அசைவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் பேசுவது, வெளியே சென்று வருவது மற்றும் வெளிக்காற்றுடன் தொடர்பில் இருப்பது போன்றவை உடல்நலனுக்கும் இருதய ஆரோக்கியத்துக்கும் நன்மைகளை வழங்குகிறது. ஆனால் வீட்டிலேயே முடங்கிவிட்ட சூழலில் எந்நேரமும் கணினியை பார்த்தபடி உட்கார்ந்திருப்பது, வேலையின்றி சும்மா இருந்தால் போனில் வீடியோக்களை பார்ப்பது போன்ற சூழல் ஏற்பட்டுவிடுகிறது. உங்களுடைய அன்றாட நாட்கள் இப்படித்தான் கழிகிறது என்றால், அதை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்.
கண்டவுடன் காதல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?
மனம், உடல் தளர்வாக இருக்க வேண்டும்
எப்போதும் நமது உடல் மிகவும் தளர்வாக இருப்பது முக்கியம். அப்போதுதான் கொழுப்பு சேருவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது மற்றும் ரத்தத்தில் சக்கரை அளவு கட்டுக்குள் இருப்பது போன்ற வேண்டிய அம்சங்கள் சரிவர இயங்கும். உடல் தசைஅக்ள் கடினத் தன்மையுடன் இருந்துவிட்டால், பல்வேறு நோய் பாதிப்புகள் மற்றும் உடல்நலன் கோளாறு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. உடலை தளர்வாக வைத்திருப்பதற்கு முன்னர், மனதை தளர்வதாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் அவசியம். அதற்கு தியானம் பேருதவியாக இருக்கிறது. மனம் ஒவ்வொரு அலைநீளத்தில் இயங்குகிறது. பொதுவாக பீட்டா அலையில் மனம் இயங்கினால் உடல் தளர்வாக இருப்பது இல்லை. அதனால் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது, மனம் ஆல்பா அலைநீளத்தில் இயங்கும். அதையடுத்து உடலும் மனமும் தளர்வாக உணரத்தொடங்கும்.
மேலே கூறப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் சின்ன சின்ன விஷயங்கள் தான். இந்த சிறு முயற்சிகள் தான் இருதய நலனுக்கு பெரியவகையில் உதவியாக இருக்கும். முடிந்தவரையில் தினந்தோறும் ஒருசில மணிநேரங்கள் ஒதுக்கி, உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்ளுங்கள். அலுவலக வேலைகளில் ஈடுபட்டு இருந்தாலும் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடந்து, ஒரு 5 நிமிடங்கள் உடலை இயக்கத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். வார இறுதியில் கிரிக்கெட், இறகுப் பந்து போன்ற விளையாட்டை தேர்வு செய்து விளையாடுங்கள். சூரிய ஒளி உங்கள் மீது படும் வகையில் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். தியானம், யோகாசனம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை கற்றுக்கொண்டு அடிக்கடி செய்துபாருங்கள்.