சர்க்கரை நோயினை விரட்ட , ஆரோக்கியமான "ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்"!

By Dinesh TG  |  First Published Oct 29, 2022, 8:57 PM IST

இன்று நாம் நீரழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் எப்படி செய்வது என்று காண உள்ளோம். 
 


இன்றைய நவீன உலகத்தில் நம்மில் பெரும்பாலோனோருக்கு சிறு வயதிலேயே சர்க்கரை,அதிக உடல் எடை , ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வந்து கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்று நாம் நீரழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் எப்படி செய்வது என்று காண உள்ளோம். 

ஓட்ஸில் அதிக அளவில் கலோரிகள் நார்சத்து உள்ளன. இந்த நார்ச்சத்து ஆனது ,இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கிறது. மேலும் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு பாதிப்பால் ஓட்ஸை அதிகளவில் தங்களது அன்றாட உணவில் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்
கடலைமாவு - 1/4 கப்
ரவை - 1/4 கப்
மோர் – 2 கப் 
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கோஸ் - 2 ஸ்பூன்
கேப்ஸிகம் – 2 ஸ்பூன்
காரட் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு _ 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

அசத்தலான "மூங்கில் சிக்கன் பிரியாணி" - எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் சேர்க்காமல், ரவையையும்,ஓட்ஸையும், ஒன்றாக போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் கடலை மாவை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

காரட், கோஸ், கேப்ஸிகம் காய்களை மெல்லிதாக வெட்டிக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். சீரகம், மிளகு, மற்றும் முந்திரிப்பருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஓட்ஸ் மற்றும் ரவை மாவினை ஒன்றாக போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் மோர் ஊற்றி கரைக்க வேண்டும். பின் அந்த மாவில் பொடித்து வைத்துள்ள முந்திரிபருப்பு, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அரிந்து வைத்துள்ள கோஸ்,,கேப்ஸிகம் ,காரட் மற்றும் தேங்காய்த் துருவல் அனைத்தையும் மாவுடன் சேர்த்து கொண்டு, ஊத்தாப்பம் பதத்திற்கு மாவினை கரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் தோசைக்கல் வைத்து , தோசைக்கல் காய்ந்த பின்பு, ஊத்தப்பம் ஊற்றி , சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து வார்த்து எடுத்தால் அசத்தலான சுவையில் ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ரெடி!!! 

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் சற்று தூக்கலாக இருக்கும். இனி ஓட்ஸ் என்றால் நம் நினைவில் கஞ்சி மட்டுமல்லாமல், இந்த ஊத்தாப்பமும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

click me!