சிக்கன் மயோனைஸ் சான்ட்விட்சசை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் ஆல் டைம் பேவரைட் என்று சொல்லும் போது அதில் கண்டிப்பாக இடம் பெரும் ரெசிபிகளுள் சான்ட்விட்ச்ம் ஒன்று. அந்த சான்ட்விட்ச்சை சிக்கன் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு சாப்பிடும் வகையில் அதன் சுவை கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கும்.
வழக்கமாக செய்கின்ற காலை உணவுகளை தவிர்த்து இந்த மாதிரி சற்று வித்தியாசமாக செய்யும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் மயோனைஸ் சான்ட்விட்சசை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிக்கன் மயோனைஸ் சான்ட்விச் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் 1/2 கப் (மெல்லியதாக அரிந்தது )
கேப்சிகம் 1/4 கப் (மெல்லியதாக அரிந்தது)
கேரட் 1/4 கப் (மெல்லியதாக அரிந்தது )
தக்காளி 5 துண்டுகள் (பொடியாக நறுக்கியது)
மயோனைஸ் 4 ஸ்பூன்
சிக்கன் துண்டுகள் 1/4 கப் (சமைத்தது)
மிளகு தூள் -1/2 ஸ்பூன்
பட்டர் - 2 ஸ்பூன்
பிரட் துண்டுகள்-5
உப்பு தேவையான அளவு
அசத்தலான "மூங்கில் சிக்கன் பிரியாணி" - எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!
செய்முறை:
1/4 கப் சிக்கன் பீஸ்களை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பொரித்த சிக்கன் துண்டுகளுடன் மயோனைஸை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் கேரட் , முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் கேப்சிகம் சேர்த்து சிறிது உப்பு, மயோனைஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதே கிண்ணத்தில் மிக்ஸி ஜாரில் சுற்றி எடுத்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கலவையானது ரெடி. ஒரு பானில் சிறிது பட்டர் சேர்த்து,பட்டர் உருகிய பின்னர், பிரட் துண்டுகளைச் சேர்த்து, இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு டோஸ்ட் பண்ண வேண்டும்.
பின் டோஸ்ட் செய்த பிரட் துண்டுகள் மீது கலவையை வைக்க பரப்பி விட வேண்டும். மற்றொரு பிரட் துண்டினை அதன் மேல் மூடி விட வேண்டும். பிரட்டின் ஒரு ஓரத்தில் இருந்து எதிர் ஓரத்தில் வெட்டி இரண்டு துண்டுகளாக வெட்டி எடுத்து கெட்சப் வைத்து பரிமாறினால் அசத்தாலான சிக்கன் மயோனைஸ் சான்ட்விட்ச் ரெடி!