அசத்தலான "மூங்கில் சிக்கன் பிரியாணி" - எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Oct 29, 2022, 4:49 PM IST

சுவையான மூங்கில் சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 


வழக்கமாக நாம் குக்கர் அல்லது ஒரு பெரிய திறந்த பாத்திரத்தில் தான் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் மூங்கிலின் 2 கணுக்களின் நடுவினில் உருளை பகுதியில் மசாலா கலந்த அரிசி மற்றும் சிக்கனை உள்ளே வைத்து நெருப்பில் எண்ணெய் இல்லாமல் சமைக்கும் முறையே மூங்கில் சிக்கன் பிரியாணி ஆகும். 

சுவையான மூங்கில் சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

சிக்கன் -1/2கிலோ
பாசுமதி அரிசி - 1/2 கிலோ 
வெங்காயம் - 2 (மெல்லிதாக நறுக்கியது )
காய்ந்த மிளகாய் -15 ( ஊற வைத்தது)
தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி பேஸ்ட்- 3 ஸ்பூன் 
பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
புதினா- கையளவு (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி- கையளவு ( பொடியாக அரிந்தது )
கெட்டித் தயிர் -1/2 கப் 
எலுமிச்சை சாறு - 1/2 பழம் 
ஏலங்காய் -3
பட்டை - 3
கிராம்பு - 5
மூங்கில் குடுவை- 1
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் மசாலா!

செய்முறை:

மூங்கில் குடுவையை முதன்முறையாக பயன்படுத்த போகிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊறவைத்த வரமிளகாயை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அடுப்பில் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்,பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும். பின் அதில் மெல்லிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பொன்னிறமாக வெங்காயம் மாறிய பின்பு, அடுப்பின் தீயை சிம்மில் வைத்து , பின் புதினா மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.பிறகு இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். 

இப்போது இதில் அரைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை கை விடாமல் வதக்கி விட வேண்டும்.  இப்போது எண்ணெய் பிரிந்து வருவதை காண முடியும். அப்போது தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்க விட வேண்டும். தக்காளி மசிந்த பிறகு, அதில் சிக்கனை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயை மிதமாக வைத்து வதக்கி விட வேண்டும். 

குட்டிஸ்களுக்கு பிடித்த "கோதுமை அப்பம்"! - நெய் மணக்க மணக்க இப்படி செய்து கொடுங்க!

பிறகு இதில் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு ,சிக்கனை கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை வேகவிட வேண்டும். சிக்கன் அரைவேக்காடு பதத்தில் வெந்த பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.  மற்றொரு பாத்திரத்தில் (2கப் அரிசிக்கு) 5 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து அரை பதமாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

அரை பதத்திற்கு அரிசி வெந்த பின் அதில் உள்ள தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு வேறு ஒரு பாத்திரத்தில் கொண்டு, அதன் மேல் அரைப்பதத்தில் வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது மூங்கில் குடுவையில் சிறிது நெய்யை சுற்றி தடவி எடுத்துக் கொண்டு அதன் உட்புறத்தில் பிரியாணி கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.

பிறகு இறுதியாக இதில் புதினா கொத்தமல்லி தூவி விட்டு வாழை இலை கொண்டு மூடி விட வேண்டும். பின் அதன் மேல் தேங்காய் குடுவையை வைக்க வேண்டும்.இப்போது குக்கரில் பாதி அளவு தண்ணீர் வைத்து அதனை தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து ஆவி வரும் பொழுது மூங்கில் குடுவையை அதன் மேல் வைத்துஅடுப்பின் தீயை அதிகமாக வைத்து சுமார் 20நிமிடங்கள் வைக்க வேண்டும்.

பின் அடுப்பினை ஆஃப் செய்து விட்டு , மூங்கில் குடுவையை 10 கழித்து திறந்து ஒரு குச்சியின் உதவியால் குடுவையின் பின்பக்கம் மெதுவாக தள்ளி விட்டால் சுவையான அசத்தலான மூங்கில் பிரியாணி ரெடி!!

click me!