இனி பெட் காஃபி வேண்டாம்... பட்டர் காஃபி குடிங்க! - நன்மையும் ஏராளம்! சுறுசுறுப்பும் தாராளம்!

By Dinesh TGFirst Published Oct 29, 2022, 3:57 PM IST
Highlights

பட்டரை காஃபியில் சேர்த்து அருந்துவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்.எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த பட்டர் காஃபி ஒரு அரு மருந்து 

நம்மில் அனைவருக்கும் அதிகாலை எழுந்தவுடன் சுட சுட ஒரு டீ அல்லது காஃபி அருந்தி விட்டு தான் அடுத்த வேலையே செய்ய தொடங்குவோம். காலை , மாலை மட்டுமல்லாமல் பலருக்கும் சற்று இடைவேளை விட்டு அடிக்கடி டீ மற்றும் காஃபி அருந்தும் பழக்கம் இருக்கிறது. செய்கின்ற வேலையை தொய்வு இல்லாமல் செய்யவும், தலைவலியில் இருந்து விடுபடவும், ஜலதோஷத்தில் இருந்து விடுபடவும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் இந்த காஃபியை அருந்துவார்கள். காஃபி அருந்துவதற்காகவே மேலும் பல காரணங்களை சொல்லி அருந்துபவர்களும் உண்டு. 

சரிங்க. காஃபி வித் பட்டர் என்ன ஸ்பெஷல்? எந்த வகையில் டிஃபரென்ட் என்று பார்க்க்கலாமா?

பட்டரை காஃபியில் சேர்த்து அருந்துவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்.எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த பட்டர் காஃபி ஒரு அரு மருந்து என்றும் மற்றும் அற்புதமான பானம் என்றும் கூறலாம். பட்டரில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கும் காரணத்தினால் இது காஃபியில் உள்ள புரதத்தின் அளவை அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது. மேலும் கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புகளை அளித்து ,மூளையை சுருசுற்றுப்பாக வைக்க துணை புரிவதோடு வயிறு சம்பந்தமான நோய்கள் விலக்கும் .

இந்த பட்டர் காஃபியை எப்படி வீட்டில் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

1 1/2 கப் தண்ணீர் 
1 ஸ்பூன் காஃபி தூள்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
2 ஸ்பூன் பட்டர் 
1 சிட்டிகை ஜாதிக்காய் தூள் 
1 சிட்டிகை இலவங்கப்பட்டை 

Carrot Halwa : தித்திப்பான கேரட் ஹல்வா !செய்யலாம் வாங்க!

செய்முறை 

அடுப்பில் ஒரு காஃபி சாஸ் பான் வைத்து அதில் , 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிகொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் போது 1 ஸ்பூன் காஃபி பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த பானில் சிறிது பட்டர், தேங்காய் எண்ணெய், ஜாதிக்காய் தூள் மற்றும் இலவங்கப் பட்டை சேர்த்து ஒன்றாக விஷ்க் கொண்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவை நுரையாக மாறி பொங்கி வரும். நுரை கலந்த கலவையை சிறிது நீக்கி விட்டு ,சூடான இந்த கலவையை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டால் சுவையான மற்றும் சூடான பட்டர் வித் காஃபி ரெடி!.

இதனை வொர்க்அவுட்டுக்கு பிறகு அருந்தினால் மிக விரைவாக தொப்பையை குறைக்க இயலும். நிச்சயம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
 

click me!